ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆகணும்.. டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் பிரமாண்ட பேரணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. முறைகேட்டில் ஈடுபட்ட ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதும் இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர் மூலமாக நாட்டில் மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு முறைகேடுகளில் ஈடுபட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Gyanesh Kumar

ராகுல் காந்தி அழைப்பு

இதே விவகாரத்தை கையில் எடுத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நிலையில்தான், தலைநகர் டெல்லியில் 'வாக்கை காப்போம் - நாட்டை காப்போம்' என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட பேரணியை இந்தியா கூட்டணி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், வணிகர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அணி திரண்டு வரும்படி ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி மிண்டோ ரோடு - கன்னோட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா மைதானம் நோக்கி இந்த பேரணி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்கள், மல்லிகார்ஜுனா கார்கே வீட்டில் இருந்து ஓபன் டாப் பேருந்தில் நின்றபடி பேரணி தொடங்கும் இடத்திற்கு வர உள்ளனர்.

முதல்வர் விஜய் பங்கேற்கவில்லை

நாடு முழுவதிலும் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஆயிரம் பேருக்கு மேல் வருவார்கள் என்று இளைஞர் காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளனர். எனினும், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் கூட்டத்தில் பங்கேற்பதை புறக்கணித்துள்ளார்.

4,000 போலீசார் பாதுகாப்பு

பேரணியை முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ராம்லீலா மைதானம் 14 பாதுகாப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று நடக்கும் பேரணியில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்க கூடும் என்று டெல்லி போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் 40,000 - 50000 பேர் கூட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. டெல்லி கேட், ராஜ்காட், ஆஜ்மேரி கேட் மற்றும் துர்க்மன் கேட் பகுதிகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+