டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நிபந்தனை விதித்த டெல்லி நீதிமன்றம்.. விசா முறைகேடு வழக்கில் உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: விசா முறைகேடு தொடர்பான விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன்பு, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, டெல்லி, மும்பை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்குச் சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடைபெற்றது.

கார்த்தி சிதம்பரம் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல சென்னை நீதிமன்றம் அனுமதி கார்த்தி சிதம்பரம் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல சென்னை நீதிமன்றம் அனுமதி

 அதிரடி ரெய்டு

அதிரடி ரெய்டு

ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த சமயத்தில் தல்வண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 263 சீன மக்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டுகிறது. இந்த வழக்கில் தான் சில நாட்களுக்கு முன்பு சிபிஐ, அவருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்துள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் கணக்காளர் எஸ் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டாக. அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ 4 நாட்கள் காவலுக்கு எடுத்துள்ளது.

 எஸ் பாஸ்கரராமன்

எஸ் பாஸ்கரராமன்

எஸ் பாஸ்கரராமன் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சிபிஐ சிறப்பு நீதிபதி பிரசாந்த் குமார், "இந்த வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்துவது சரியாக இருக்கும். எனவே, பாஸ்கரனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளிக்கிறோம்" என்று நீதிபதி குறிப்பிட்டார்.

 முன்ஜாமீன்

முன்ஜாமீன்

இந்தச் சூழலில் விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் இன்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். டெல்லியில் சிபிஐ சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

 நீதிபதி

நீதிபதி

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.கே.நாக்பால், "சிபிஐ தரப்பு கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய நினைத்தால் அதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் வழங்குவது என்பது குறைவான கால அவகாசமாக உள்ளது. சிபிஐ கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய நினைத்தால், சட்டரீதியான தீர்வுகளைப் பெற விண்ணப்பதாரருக்குக் குறைந்தபட்சம் 3 வேலை நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Delhi Court directed CBI to give a minimum of three days' notice to Karti Chidambaram in case they plan to arrest him in the Chinese visa scam case:(விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன்) Chinese visa scam case Karti Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X