பிரதமர் நரேந்திர மோடியை தனது கட்சியில் இணையச் சொன்ன இஸ்ரேல் பிரதமர்! காங்கிரஸ் கொடுத்த பதிலை பாருங்க
டெல்லி: இஸ்ரேலிய பிரதமர் நஃப்தாலி பென்னட், பிரதமர் நரேந்திர மோடியை தனது கட்சியில் சேருமாறு கிண்டலாக கமெண்ட் அடித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பதிலடியாக கிண்டல் செய்துள்ளது.
இது ஒரு நல்ல யோசனை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு கடந்த 31ம் தேதி தொடங்கிய நிலையில், இதில் பங்கேற்க பிரதமர் நரேந்தேிர மோடி கிளாஸ்கோ சென்றார்.
இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
|
மோடி இஸ்ரேல் பிரதமர் சந்திப்பு
இந்த பயணத்தின்போது, இஸ்ரேலிய பிரதமர் நப்தலி பென்னெட்டை மோடி சந்தித்து பேசினார். அப்போது இஸ்ரேலிய பிரதமர் நப்தலி பென்னட் பிரதமர் மோடியிடம், "நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்" என்று தெரிவித்தார். மேலும், மோடியை தனது யமினா கட்சியில் சேருமாறு இஸ்ரேல் பிரதமர் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்டதும், மோடி சிரித்து விட்டார். இருவரும் சிரித்தபடியே கை குலுக்கினர். இந்த வீடியோ வெளியாகி வைரலாக சுற்றி வருகிறது.
|
காங்கிரஸ் கிண்டல்
பார்த்தீர்களா, மோடியின் புகழை.. என்று பாஜக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், பென்னட் மிகச் சிறப்பான ஐடியா. இந்தியாவை காப்பாற்ற முதல் படி இதுதான். இவ்வாறு கிண்டல் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

பாஜக நிலைமை
ஹிமாச்சல பிரதேசத்தில், இடைத்தேர்தல் நடந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும், மண்டி லோக்சபா தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இந்த மாநிலத்தை சேர்ந்தவராகும். ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், ஒரு சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக டெபாசிட்டை இழந்து படுதோல்வியடைந்துள்ளது.

விலை உயர்வுகள்
எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு இந்த தேர்தலில் கடுமையாக எதிரொலித்துள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும், டீசல் விலை சாமானியர்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியுள்ளது. எனவே மோடி அரசை இறங்கியடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளது காங்கிரஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications