அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு.. இளைஞர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் காங்கிரஸ்.. நாளை போராட்டம்..!
டெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சி நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
Recommended Video
கடந்த ஜூன் 14ஆம் தேதி மத்திய அரசு சார்பாக நாட்டு இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்கும் அக்னிபாத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் பணியில் இருப்பர். இந்தத் திட்டத்தில் பணியாற்றும் 25% பேர் மட்டும் 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணியில் இருப்பர். மீதமுள்ள 75% பேர், ஓய்வூதியமின்றி பணியில் இருந்து அனுப்பி வைக்கப்படுவர்.

இதுகுறித்து இந்திய ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னிபாத் திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆவேகமாக இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முக்கியமாக பீஹார் மாநில ரயில் நிலையங்களில் நடைபெற்ற போராட்டத்தின், ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
அதேபோல் தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அதேபோல் உத்தரப் பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 260 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பீஹாரில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 15 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களை போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறுபக்கம் மத்திய அரசு தரப்பில் இளைஞர்களின் ஆவேச போராட்டத்தை கட்டுப்படுத்த வயது வரம்பில் தளர்வு, துணை ராணுவப் படையில் ஒடஒதுக்கீடு, அசாம் ரைபில்ஸ் படையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களுக்கு ஆதரவாகவும், அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நாளை காங்கிரஸ் கட்சி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. இதில் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் என்று முன்பே கூறினேன். அதேபோல் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதோடு, பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இப்போது அக்னிபாத் வேலைவாய்ப்பு திட்டத்தை திரும்பப் பெறுவதன் மூலம் பிரதமர் இளைஞர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கும் நிலை வரும் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications