கொரோனா எங்கும் இல்லை.. பிரதமர் மோடி என்ன மாஸ்க் அணிகிறாரா?.. காங். தலைவர் கார்கே ஷாக் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனாவில் அதிவேகமாக பரவும் பி.எப் 7 வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த சூழலில், கொரோனா எங்கும் இல்லை என்றும்.. யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்றும் பிரதமர் மோடி கூட மாஸ்க் அணிவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டு விட்டோம்.. இனி இயல்பு வாழ்க்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று இந்தியா மட்டும் அல்ல.. உலகமே நினைத்துக் கொண்டு இருந்தது.

இந்த நிலையில், உலகில் முதல் முதலாக கொரோனா பரவிய நாடான சீனா மீண்டும் சர்வதேச நாடுகளுக்கு ஒரு பீதியை கிளப்பி விட்டு இருக்கிறது. சீனாவில் தற்போது பரவியிருக்கும் ஒமிக்ரானின் மாறுபாடு வகையான பிஎப் 7 வகை கொரோனாவால் அங்கு நிலமை கையை மீறி சென்றுள்ளது.

புது வகை கொரோனா

புது வகை கொரோனா

சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. சீனாவில் அதிவேகமாக பரவும் இந்த கொரோனா அமெரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகளிலும் பரவியுள்ளது. இந்தியாவில் கூட 3 பேருக்கு இந்த புது வகை கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. எனினும், சீனாவை போல நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு வழிகாட்டுதல்கள்

பல்வேறு வழிகாட்டுதல்கள்

விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை(ரேண்டமாக) செய்யும் நடைமுறை மீண்டும் அமல் ஆகியுள்ளது. அதேபோல், மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அவசியம் இன்றி பொதுநிகழ்ச்சிகளில் கூட வேண்டாம் என்று கூட இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ளதால், மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு விடுத்துள்ளது.

யாத்திரையை நிறுத்த வேண்டும்

யாத்திரையை நிறுத்த வேண்டும்

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் தனது யாத்திரையில், ராகுல் காந்தி கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் இல்லாவிட்டால் யாத்திரையை நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியிருந்தது. எனினும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப்பயணத்தை யாரும் தடுத்த நிறுத்த முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

 கொரோனா எங்கும் இல்லை

கொரோனா எங்கும் இல்லை

அதேபோல, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், கொரோனா எங்கும் இல்லை என்றும் பாஜக அரசு தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மல்லிகர்ஜூன் கார்கே கூறுகையில், "ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அரசியல் லாபம் கொண்டது இல்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போன்ற மக்களின் பிரச்சினைகளை எழுப்புகிறது.

மோடி கூட மாஸ்க் அணிவது இல்லை

மோடி கூட மாஸ்க் அணிவது இல்லை

இந்த யாத்திரையின் மிகப்பெரிய வெற்றி பாஜகவுக்கு பயத்தை கொடுத்துள்ளது. அதனால்தான் கொரோனா பிரச்சினையை எழுப்புகிறது. கொரோனா எங்கும் இல்லை. யாருக்கும் எதுவும் ஆகாது. பிரதமர் மோடி கூட மாஸ்க் அணிவது இல்லை. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இந்த யாத்திரையை நிறுத்துவதற்கே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன" என்றார். சீனாவில் பரவும் கொரோனா உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+