டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வேக்சின் போட்டால் ரத்த கட்டு ஏற்படுமா?.. மிக மிக குறைவுதானாம்.. மத்திய நிபுணர் குழு அறிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வேக்சின் எடுத்தவர்களில் மிக மிக குறைவான நபர்களுக்கு மட்டுமே ரத்த கட்ட பிரச்சனை ஏற்படுவதாக நிபுணர் குழு மூலம் மத்திய சுகாதாரத்துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Corona Vaccine தொடர்பான சந்தேகங்கள் | Doctor Dilipan விளக்கம்

    இந்தியாவில் சில மக்களிடையே கொரோனா வேக்சின்களை எடுத்துக்கொள்வதற்கான அச்சம் நிலவி வருகிறது. கொரோனா வேக்சின் எடுத்தால் நரம்பில் ரத்த கட்டு வரும், இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது, உறுப்புகள் செயல் இழக்கிறது என்றெல்லாம் சிலரிடம் பீதி நிலவி வருகிறது.

     கோடீஸ்வரர் ஆக மாற்றும் 1 ரூபாய் நாணயம்... அலட்சியமாக எங்கேயும் போட்டு விடாதீர்கள் கோடீஸ்வரர் ஆக மாற்றும் 1 ரூபாய் நாணயம்... அலட்சியமாக எங்கேயும் போட்டு விடாதீர்கள்

    வெளிநாடுகளிலும் ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர்செனகா வேக்சின் எடுத்த சிலருக்கு இதேபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டன, thrombosis எனப்படும் ரத்த கட்ட தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனால் டென்மார்க்ம் வெனிசுலா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் கூட ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர்செனகா வேக்சின் பயன்படுத்துவது சில நாட்கள் நிறுத்தப்பட்டது.

    சோதனை

    சோதனை

    ஆனால் இந்த இந்த வேக்சின் பாதுகாப்பானது என்று உலக சுகாதார மையமும், ஐரோப்ப நிறுவனங்களும் சோதனைகளுக்கு பின் தெரிவித்தன. இந்த நிலையில் இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர்செனகா வேக்சின் கோவிட்ஷீல்ட் என்ற பெயரில் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வேக்சினின் பக்க விளைவு குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று National AEFI (தேசிய வேக்சின் தொடர்ந்து பக்கவிளைவு குழு) எனப்படும் குழுவிடம் மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருந்தது.

    உத்தரவு

    உத்தரவு

    அதாவது இந்தியாவில் கொரோனா வேக்சின் எடுக்கும் மக்களிடம் இதுபோன்ற பக்க விளைவுகள் உள்ளதா என்று கேட்டு, அதை குறித்து ரிப்போர்ட் அளிக்கும்படி AEFI அமைப்பிடம் மத்திய சுகாதாரத்துறை கடந்த ஏப்ரலில் கூறி இருந்தது. இந்த ஆராய்ச்சி முடிந்த நிலையில், AEFI சார்பாக தற்போது ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனாவிற்கு வேக்சின் எடுக்கும் நபர்களிடம் பெரிய அளவில் ரத்த கட்டு பக்க விளைவுகள் ஏற்படவில்லை.

    ரிப்போர்ட்

    ரிப்போர்ட்

    இந்தியாவில் வேக்சின் எடுக்கும் நபர்களிடம் ரத்த கசிவு, ரத்த கட்டு பக்க விளைவுகள் மிக மிக குறைவாகவே ஏற்படுவதாக இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த குறைவான எண்ணிக்கையும் கூட எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வேக்சின் எடுத்து பக்க விளைவு வந்த 498 பேரை இந்த அமைப்பு சோதனை செய்துள்ளது. பக்க விளைவு வந்த 498 பேரை சோதனை செய்ததில் 26 பேருக்கு மட்டுமே ரத்த கட்ட, ரத்த கசிவு பக்க விளைவுகள் இருந்துள்ளன.

    பக்க விளைவு

    பக்க விளைவு

    இந்த ரத்த கட்டுகள் ரத்த பாதையை மொத்தமாக அடைக்கும் அளவிற்கு மோசமான பக்க விளைவாக இருந்துள்ளன. ஆனாலும் இந்தியாவில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்த ரத்த கட்டு பிரச்சனை உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த குழுவின் ஆராய்ச்சியின் படி கோவிட்ஷீல்ட் எடுத்தவர்களில் 10 லட்சம் பேரில் 0.61% பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டுள்ளது.

    சிவப்பு

    சிவப்பு

    இந்தியாவில் கோவிட்ஷீல்ட் வேக்சின் சிறப்பாக இருந்துள்ளது. யுனைட்டட் கிங்கிடமில் கோவிட்ஷீல்ட் வேக்சின் எடுத்த 10 லட்சம் பேரில் 4 பேருக்கு கொரோனா வந்துள்ளது. அதேபோல் ஜெர்மனியில் 10 லட்சம் பேரில் 10 பேருக்கு கொரோனா வந்துள்ளது. இன்னொரு பக்கம் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் எடுத்த யாருக்கும் பெரிய பக்க விளைவு இல்லை.

    கோவாக்சின்

    கோவாக்சின்

    கோவாக்சின் எடுத்த யாருக்கும் ரத்த கட்டு பிரச்சனை ஏற்படவில்லை. மோசமான பக்க விளைவு யாருக்கும் ஏற்படவில்லை என்று அந்த குழுவின் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வேக்சின்கள் மூலம் ஏற்படும் ரத்த கட்ட பிரச்சனை மிக மிக குறைவு என்று அந்த குழு தனது ரிப்போர்ட்டை முடித்துள்ளது.

    English summary
    Corona Vaccines causing a minuscule blood clot and bleeding effects after taking the sho says Center Panel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X