ஒரே நாளில் 627 பேர்.. இத்தாலியின் கருப்பு நாள்.. உலகம் முழுக்க அதிகரித்த பலி..ஷாக்கிங் புள்ளி விவரம்

கொரோனா வைரஸால் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 10831 பேர் பலியாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸால் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 10831 பேர் பலியாகி உள்ளனர். இதுதான் கொரோனா காரணமாக ஒரே நாளில் பதிவான அதிக பலி எண்ணிக்கை ஆகும். இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவி வருகிறது. எல்லா நாடுகளையும் வேறுபாடு இன்றி இந்த வைரஸ் தாக்கியுள்ளது. 145 நாடுகளில் இந்த வைரஸ் மிக தீவிரமான பிரச்சனையாக மாறியுள்ளது.

உலகம் முழுக்க 275,276 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . உலகம் முழுக்க 11384 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

சீனா எப்படி

சீனா எப்படி

சீனாவில் 81088 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த வைரஸால் 3,255 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் நேற்று மட்டும் 41 பேருக்கு புதிதாக வைரஸ் தாக்கியுள்ளது. 7 பேர் இந்த வைரசால் புதிதாக நேற்று பலியாகி உள்ளனர். சீனாவில் கட்டுக்குள் வந்த கொரோனா வைரஸ் கொஞ்சம் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. அங்கு மீண்டும் மக்களுக்கு கொரோனா தாக்க தொடங்கி உள்ளது.

இத்தாலி நிலை

இத்தாலி நிலை

ஆனால் கொரோனாவால் மிக மோசமாக சீனாவை விட இத்தாலிதான் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்குதான தினமும் பலி எண்ணிக்கை இதனால் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸால் இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலியாகி உள்ளனர். இதுதான் ஒரே நாளில் கொரோனா காரணமாக பதிவான அதிக பலிகள் ஆகும். இத்தாலியில் 47,021 பேர் வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளனர். ஒரே நாளில் இத்தாலியில் 5,986 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

கொரோனாவால் இத்தாலியில் இதுவரை 4,032 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 21,510 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு நேற்று மட்டும் 3,433 பேர் இதனால் பாதிக்க்கப்பட்டார்கள். நேற்று மட்டும் 262 பேர் இதனால் பலியானார்கள். இதுவரை ஸ்பெயினில் 1,093 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர்.

ஈரான் நிலை

ஈரான் நிலை

இன்னொரு பக்கம் ஈரானிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 19,644 பேர் ஈரானில் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு 1,433 பேர் இதுவரை இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை மறைக்க படுவதாக புகார் உள்ளது . ஜெர்மனியில் 19,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 12,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 450 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்க இன்று மட்டும்

அமெரிக்க இன்று மட்டும்

அமெரிக்காவில் நேற்று மட்டும் 5620 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியது. அங்கு இதுவரை 19,429 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை 257 பேர் அங்கு இதனால் பலியாகி உள்ளனர். மொத்தமாக கலிபோர்னியா, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் என்று ஒரு மாகாணம் விடாமல் எல்லா மாகாணங்களிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்க அரசு இதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+