டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேக்சின் போட்டவர்களையும் தாக்கலாம்.. கலங்கடிக்கும் "டெல்டா +" கொரோனா.. மருத்துவர்கள் வார்னிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: உருமாற்றம் அடைந்த டெல்டா + வகை கொரோனா, மிகவும் மோசமானதாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், டெல்டா + வகை கொரோனா வைரஸ் வேக்சின் போட்டவர்களையும் தாக்க கூடிய ஆபத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    Delta + ஆக உருமாற்றம் அடைந்தது Delta வகை Coronavirus.. எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் ?

    உலக நாடுகளை கலங்கடித்த உருமாற்றம் அடைந்த கொரோனாவான டெல்டா வகை மீண்டும் உருமாற்றம் அடைந்துள்ளது. டெல்டா வகை கொரோனாவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 ஆக மாறி உள்ளது. இந்த B.1.617.2.1 கொரோனாதான் டெல்டா + என்று அழைக்கப்படுகிறது.

    இதற்கு இன்னொரு பெயர் AY.1. டெல்டா வகை கொரோனாவான B.1.617.2 கொரோனாவில் 417வது வரிசையில் உள்ள "கே" என்ற ஸ்பைக் புரோட்டின் "என்" வகை ஸ்பைக் புரோட்டினாக மாறியுள்ளது.

     சென்னையில் பல முக்கிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்.. மின்சார வாரியம் அறிவிப்பு சென்னையில் பல முக்கிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்.. மின்சார வாரியம் அறிவிப்பு

    மாற்றம்

    மாற்றம்

    இப்படி உருமாற்றம் அடைந்த K417N ஸ்பைக் புரோட்டின்தான் டெல்டா + வகை என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இந்த டெல்டா + வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த டெல்டா + வகை கொரோனா வைரஸ் வேக்சின் போட்டவர்களையும் தாக்க கூடிய ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக இந்தியா டாப் வைரலாஜி மருத்துவரும், சார்ஸ் கோவிட் ஜீனோம் ஆராய்ச்சி குழுவின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் ஷாஹித் ஜமீல் பேட்டி அளித்துள்ளார்.

    பேட்டி

    பேட்டி

    ஷாஹித் ஜமீல் அளித்துள்ள பேட்டியில், டெல்டா + வகை கொரோனா மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். இது கொரோனா எதிர்ப்பு சக்தி கொண்டவர்களையும் தாக்கும் ஆபத்து உள்ளது. அதாவது வேக்சின் மூலம் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் எல்லோரையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    வேகம்

    வேகம்

    டெல்டா வகை கொரோனாவின் அனைத்து குணங்களும் டெல்டா + வகை கொரோனாவில் உள்ளது. அதே சமயம் இதில் K417N உருமாற்றமும் ஏற்பட்டுள்ளது. இது பீட்டா வகை கொரோனாவில் ஏற்பட்ட மாற்றம் ஆகும். டெல்டா வகை கொரோனாவில் பீட்டா வகையில் ஏற்பட்டது போன்ற மாற்றம் ஏற்பட்டு டெல்டா + வகை உருவாகி உள்ளது. டெல்டா + வகை இதனால்தான் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.

    பீட்டா

    பீட்டா

    தென்னாப்பிரிக்காவில் பீட்டா வகை பரவிய போது வேக்சின் போட்டவர்களும் பாதிக்கப்பட்டனர். முக்கியமாக அங்கு ஆஸ்டர்செனகா வேக்சின் போட்டவர்கள் இதனால் பாதிப்பு அடைந்தனர். ஆஸ்டர்செனகா வேக்சின் பீட்டா வகைக்கு எதிராக வலிமையானதாக இல்லை. இதனால் டெல்டா + கொரோனாவும் வேக்சினில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.

    இல்லை

    இல்லை

    ஆனால் அதே சமயம் டெல்டா + வகை வைரஸ் வேகமாக பரவும் என்பதற்கு சான்று இல்லை. இப்போது வரை டெல்டா + வகை வேகமாக பரவும் என்பதற்கு உலகம் முழுக்க ஆதாரம் எதுவும் இல்லை. இந்தியாவில் 25000 கேஸ்களுக்கு 20 ஜீனோம் ஆராய்ச்சி மட்டுமே செய்கிறார்கள். இதை அதிகரித்தால் மட்டுமே டெல்டா + வகை எவ்வளவு பரவி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதே சமயம் டெல்டா + வகை வைரஸ் வேகமாக பரவும் என்பதற்கு சான்று இல்லை. இப்போது வரை டெல்டா + வகை வேகமாக பரவும் என்பதற்கு உலகம் முழுக்க ஆதாரம் எதுவும் இல்லை. இந்தியாவில் 25000 கேஸ்களுக்கு 20 ஜீனோம் ஆராய்ச்சி மட்டுமே செய்கிறார்கள். இதை அதிகரித்தால் மட்டுமே டெல்டா + வகை எவ்வளவு பரவி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியும்.

    கட்டாயம்

    கட்டாயம்

    டெல்டா + வகை மூலம் மூன்றாம் அலை ஏற்படுமா என்று சொல்ல முடியாது. இப்போது டெல்டா + வகை கொரோனா குறைவாகவே இந்தியாவில் உள்ளது. 2020 டிசம்பரில் டெல்டா வகை குறைவாகவே இருந்தது. ஆனால் பின்னர் அது வேகமாக பரவி இரண்டாம் அலையை ஏற்படுத்தியது. அது போல டெல்டா + ஏற்படுத்தலாம். இதனால் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    மஹாராஷ்டிரா

    மஹாராஷ்டிரா

    மத்திய பிரதேசத்தில் கொரோனா வேக்சின் எடுத்த பின்பும் 6 பேர் பலியாகி உள்ளனர். இதில் டெல்டா வகை கொரோனா தாக்கி பலியான நபருக்கு இரண்டு டோஸ் வேக்சின் ஏற்கனவே போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஒருவேளை டெல்டா + வகை தாக்கி இருக்கலாமோ என்று ஆராயப்பட்டு வருகிறது. மற்றவர்கள் எல்லோரும் ஒரு டோஸ் வேக்சின் போட்டவர்கள். இது போல மகாராஷ்டிராவில் 21 பேருக்கு டெல்டா + கொரோனா தாக்கி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Delta + strain may affect people with antibodies and those who vaccinated too says, Senior Doctor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X