ஹைட்ராக்சிகுளோரோகுயின் பலன் தரவில்லை.. இந்த 2 மருந்து நம்பிக்கை தருகிறது.. டாஸ்க் ஃபோர்ஸ் பரிந்துரை
கொரோனாவிற்கு எதிராக ஃபெவிபிரவிர் மற்றும் டோசிலிஃசுமாப் என்ற இரண்டு மருந்துகள் அதிக பலன் அளிக்கிறது என்று மத்திய அரசு அமைத்த TFORD எனப்படும் மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான பணிக்குழு பரிந்துரை ச
டெல்லி: கொரோனாவிற்கு எதிராக ஃபெவிபிரவிர் மற்றும் டோசிலிஃசுமாப் என்ற இரண்டு மருந்துகள் அதிக பலன் அளிக்கிறது என்று மத்திய அரசு அமைத்த TFORD எனப்படும் மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.
Recommended Video
பல்வேறு மருந்துகளை வெவ்வேறு நோய்களுக்கு எதிராக பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு சார்பாக பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தலைமையில் TFORD எனப்படும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க பல்வேறு மருந்துகள் தொடர்பாக இந்த குழு ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
அதேபோல் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தும் 19 மருந்துகளை இந்த குழு ஆராய்ச்சி செய்து வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும் இது.

உலகம் முழுக்க உள்ள மருந்துகள்
உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக கிட்டத்தட்ட 60 மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அதாவது கொரோனாவை கட்டுப்படுத்த, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தீவிரமான மோசமான உடல்நிலையில் இருக்கும் நோயாளிகளை குணப்படுத்த என்று பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இந்தியாவில் 19 மருந்துகள் பிரபலமாக இருக்கிறது. இந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயார் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சி
இந்த நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின், குளோரோகுயின் உள்ளிட்ட 19 மருந்துகளை இந்த பணிக்குழு ஆராய்ச்சி செய்தது. இந்த மருந்துகள் கொரோனாவை தடுக்க எப்படி பயன்படுகிறது. கொரோனா ஏற்பட்டால் அதை குறைக்க எப்படி பயன்படுகிறது. எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது. இந்த மருந்துகள் இந்தியாவில் எவ்வளவு தயார் செய்யப்பட்டு உள்ளது என்று ஆராய்ச்சி செய்தது. இது தொடர்பாக வெளியான ஆராய்ச்சி கட்டுரை மற்றும் மருத்துவ சோதனைகள் மூலம் இந்த ஆராய்ச்சியை பணிக்குழு செய்துள்ளது.

என்ன மருந்துகள்
அதன்படி பின்வரும் மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன: ஹைட்ராக்சிகுளோரோகுயின், குளோரோகுயின், லோபினாவிர், பாலக்சிவிர் மார்பாக்சில், துரோனாவிர், ரிபாவிரின் +ஐஎப்என் பேடம் கிலாடேஸ்விர், ஓசெல்டாமிவிர், உமிபெனோவிர், கமோஸ்டாட் மெய்ஸ்லேட், இன்டெர்பெரோன் பீட்டா, ஃபெவிபிரவிர், டேய்கோபிளானின், நைஜர்சின், இவர்மெக்டின் மற்றும் டோசிலிஃசுமாப் ஆகிய மருந்துகள் சோதனை செய்யப்பட்டது.

என்ன முடிவு
இந்த சோதனையின் கொரோனாவிற்கு எதிராக ஃபெவிபிரவிர் மற்றும் டோசிலிஃசுமாப் என்ற இரண்டு மருந்துகள் அதிக பலன் அளிக்கிறது என்று மத்திய அரசு அமைத்த மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஃபெவிபிரவிர் என்பது வைரஸ் தாக்குதலுக்கு எதிராக பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்து ஆகும். ஜப்பானில் இன்ஃபுளுயென்சாவிற்கு எதிராக இந்த ஃபெவிபிரவிர்தான் பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 18 மருத்துவ சோதனைக்கு இந்த ஃபெவிபிரவிர் உட்படுத்தப்பட்டது.

நல்ல பலன்
அதில் ஃபெவிபிரவிர் நல்ல பலன் அளிக்கும் வகையில் முடிவுகளை கொண்டு உள்ளது. அதேபோல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மருந்தான டோசிலிஃசுமாப் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு உள்ளது. டோசிலிஃசுமாப் உலகம் முழுக்க மொத்தம் 21 மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுவும் நல்ல பலன் அளிக்கிறது. இரண்டு மருந்தும் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.

பலன் இல்லை
ஆனால் ஹைட்ராக்சிகுளோரோகுயின், குளோரோகுயின் இரண்டும் பெரிய அளவில் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்று இந்த குழு கூறுகிறது. இந்த குழு நடத்திய சோதனையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின், குளோரோகுயின் குறைவான மதிப்பெண்தான் பெற்றுள்ளது. அதேபோல் ரெமிடிஸ்வர் மருந்தும் இதில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பெறுவதற்காக அமெரிக்கா இந்தியாவுடன் சண்டை போட்டது. ஆனால் அமெரிக்காவிற்கு இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் பெரிய அளவில் உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications