டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. மோடி சொன்ன ஞாயிற்றுக்கிழமை ஐடியா.. அப்படியே காப்பி அடிக்கப்பட்டதா? வெளியான வைரல் வீடியோ!

கொரோனாவிற்கு எதிராக பிரதமர் மோடி கொடுத்த ஐடியாக்களில் ஒன்று காப்பி அடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவிற்கு எதிராக பிரதமர் மோடி கொடுத்த ஐடியாக்களில் ஒன்று காப்பி அடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

கொரோனாவின் தீவிரம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 209 பேர் பாதித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் ஐந்து பேர் இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிரதமர் மோடி நேற்று மக்கள் முன் உரையாற்றினார். கொரோனா குறித்து முக்கிய ஆலோசனைகள், திட்டங்களை மோடி இன்று அறிவித்தார். இதில்தான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

பிரதமர் மோடி தனது பேச்சில், கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. எல்லோரும் வீட்டில் இருந்து தங்கள் பணிகளை செய்ய வேண்டும். இந்த ஒரு வேண்டுகோளை மக்கள் ஏற்க வேண்டும். இதுதான் தற்போது அவசர தேவை.

திட்டம்

திட்டம்

அன்று மாலை மக்கள் எல்லோரும் 5 மணிக்கு தங்கள் கதவு அருகே, அல்லது பால்கனி அருகே வந்து கை தட்ட வேண்டும். நாடு முழுக்க சைரன் ஓலிக்க வேண்டும். கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் கைதட்ட வேண்டும். இதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

காப்பியா?

காப்பியா?

இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த திட்டம் காப்பி அடிக்கப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடி மக்களை ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே வந்து கைதட்டும் படி கூறி உள்ளார். இதே போன்ற சம்பவம் ஸ்பெயினில் நடைபெற்றது. அங்கு மாட்ரிட் நகரில் மக்கள் கடந்த 14ம் தேதி மாலை இதேபோல் தங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் பால்கனி அருகே வந்து கைதட்டினார்கள். வீட்டிற்குள் ஒடுங்கி இருந்த எல்லோரும் வெளியே வந்து கைதட்டினார்கள்.

ஏன் இப்படி

தங்கள் நாட்டில் துரிதமாக உழைக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்படி செய்தனர். அதன்பின் இரண்டு நாட்கள் இதேபோல் அவர்கள் வெளியே வந்து கைதட்டி நன்றி செலுத்தினார்கள். அரசு அலுவலகங்கள், ஆம்புலன்ஸ்களில் இருக்கும் சைரன்கள் ஒலிக்கப்பட்டது.மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்படி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செய்தனர்.

மீண்டும்

மீண்டும்

இதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதேபோல் தற்போது கைதட்டும் ஐடியாவை மோடி கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்துவிட்டு மோடி இந்த ஐடியாவை கொடுத்தாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இல்லையென்றால் மோடிக்கு வேறு யாராவது இந்த வீடியோவை பார்த்துவிட்டு ஐடியா கொடுத்தார்களா என்று கேள்விகள் எழுந்து இருக்கிறது. இதை இணையத்தில் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

English summary
Coronavirus: Is PM Modi's clap at the door plan copied from Spain? - Video goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X