டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கு தளர்வு.. ஏற்றுக்கொள்ளாத 3 மாநிலங்கள்.. டெல்லி, பஞ்சாப், தெலுங்கானாவில் முழு கட்டுப்பாடு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மொத்தம் மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 20ம் தேதி எந்த விதமான ஊரடங்கு தளர்வும் செய்யப்படாது அம்மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் லாக் டவுனை தளர்த்த முடியாது என்று முடிவு செய்துள்ளது.

Recommended Video

    லாக்டவுன் தளர்வு பகுதியில் எவையெல்லாம் இயங்கும்?

    ஏப்ரல் 20ம் தேதி, திங்கள் கிழமையில் இருந்து நாடு முழுக்க சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு கொண்டு வரப்பட உள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் மட்டும் தளர்த்தப்பட உள்ளது.

    Coronavirus: Telangana, Delhi and Punjab wont relax lockdown in their states

    கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாட் ஸ்பாட் பகுதிகளில் எப்போதும் போல ஊரடங்கு மே 3ம் தேதி தொடரும். மத்திய அரசு இதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 20ம் தேதி எந்த விதமான ஊரடங்கு தளர்வும் செய்யயப்படாது அம்மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் மத்திய அரசின் ஊரடங்கு தளர்வை தங்கள் மாநிலங்களில் ஏற்படுத்த போவதில்லை என்று இந்த மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.

    அதன்படி டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் லாக் டவுனை தளர்த்த முடியாது என்று முடிவு செய்துள்ளது. அதன்படி தெலுங்கானாவில் ஊரடங்கு மே 7ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

    கொரோனா பாதிப்பை பொறுத்து மே 5ம் தேதி முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்து இருக்கிறது. அதேபோல் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் மே 3ம் தேதி வரை எந்த விதமான ஊரடங்கு தளர்வும் செய்யப்படாது அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

    ஊரடங்கு தளர்வு.. தமிழகம், கர்நாடகாவில் தொழிற்சாலைகள் நாளை முதல் இயங்குமா? நிலை என்ன?ஊரடங்கு தளர்வு.. தமிழகம், கர்நாடகாவில் தொழிற்சாலைகள் நாளை முதல் இயங்குமா? நிலை என்ன?

    இந்த மூன்று மாநிலங்களும் கொரோனா காரணமாக தீவிரமாக பாதித்துள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் கொரோனா காரணமாக 809 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் அங்கு 186 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 605 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை மொத்தம் 18 பேர் தெலுங்கானாவில் பலியாகி உள்ளனர்.

    பஞ்சாப்பில் கொரோனா காரணமாக 244 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் அங்கு 37 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 191 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 16 பேர் பஞ்சாப்பில் பலியாகி உள்ளனர். டெல்லியில் கொரோனா காரணமாக 1893 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் அங்கு 207 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 1643 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை மொத்தம் 43 பேர் டெல்லியில் பலியாகி உள்ளனர்.

    இன்னொரு பக்கம் கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வு தொடர்பாக ஏப்ரல் 21ம் தேதி இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    English summary
    Coronavirus: Telangana, Delhi, and Punjab won't relax lockdown in their states amid all other states will follow center order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X