டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் 4367440 பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 3395926 பேர் டிஸ்சார்ஜ்

நாடு முழுவதும் கொரோனாவிற்கு 4367440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 3395926 பேர் குணமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவிற்கு 4367440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 3395926 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 897573 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 73941 பேராக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

Coronavirus updates: India affect cross 43 lakhs

கொரோனா வைரஸ் என்னும் கொடிய அரக்கனால் உலக அளவில் 3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் 2 கோடி பேர் வரை மீண்டுள்ளனர்.

மருந்துகள் இல்லாத காரணத்தால் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரித்து தொற்றுக்கு உள்ளானவர்களை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்தி தகுந்த சிகிச்சை அளிப்பதே கொரோனாவில் இருந்து மீளும் ஒரே வழியாகும். எனவே உலக நாடுகள் அனைத்தும் தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் குறியாக இருக்கின்றன.

இந்தியாவும் நாளுக்கு நாள் தனது பரிசோதனை வசதியை அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றுக்கு ஆளானவர்களை விரைவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நாடுமுழுவதும் தற்போது நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதிக்கும் திறனை இந்தியா பெற்றிருக்கிறது. அதன்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 921 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாட்டில் நடத்தப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்து விட்டது.

இதுவரை 5 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரத்து 128 பரிசோதனைகள் நடந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைக்காக நாடு முழுவதும் 1,668 பரிசோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 1,035 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பைனல் ஸ்டேஜில் களம் இறங்கும் டான்கள்.. தடுப்பூசி விஷயத்தில் இந்தியா டாப் கியர்.. செம்ம சர்ப்ரைஸ் பைனல் ஸ்டேஜில் களம் இறங்கும் டான்கள்.. தடுப்பூசி விஷயத்தில் இந்தியா டாப் கியர்.. செம்ம சர்ப்ரைஸ்

நாடு முழுவதும் கொரோனாவிற்கு 4367440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்த நிலையில் நேற்றைய தினம் 75ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டது சற்றே ஆறுதலை தருகிறது.

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கையும் 3395926 ஆக அதிகரித்து உள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 78 சதவீதமாகும். தற்போதைய நிலையில் 897573 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் அல்லது வீட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 73941 பேராக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் உள்ளது.

English summary
India’s Covid-19 total affect in 43 lakhs. Meanwhile overall recoveries from the infection crossed the 33.95 lakh milestone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X