டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனாவிற்கு 68 லட்சம் பேர் பாதிப்பு - 58 லட்சம் பேர் மீண்டனர்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,32,988 பேராக அதிகரித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,32,988 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 58,24,462 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு 1,05,554 பேர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 9,02,972 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,63,76,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 27,393,733 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,059,915 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு 7,922,732 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Coronavirus updates: India corona recoveries 58,24,462

அமெரிக்காவில் கொரோனாவிற்கு 7,773,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 4,975,129 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 216,705 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 25,81,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரையில் நாட்டில் 8 கோடியே 22 லட்சத்து 71 ஆயிரத்து 654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது. கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொடுவதற்கு 110 நாட்கள் ஆனது நினைவுகூரத்தக்கது. அதன் பின்னர் 10 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டுவதற்கு 59 நாட்கள் ஆனது. 20 லட்சத்தை ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி கடந்தது. 23ஆம் தேதி பாதிப்பு 30 லட்சத்தை கடந்தது.

கடந்த மாதம் 5ஆம் தேதி பாதிப்பு 40 லட்சம் கடந்தது. அடுத்த 11 நாளில் பாதிப்பு 50 லட்சம் தாண்டியது. மேலும் 12 நாளில் பாதிப்பு 60 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,32,988 பேராக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும்கூட, அதற்கு இணையாக கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் இருக்கிறது என்பது தொடர்ந்து ஆறுதல் அளிக்கும் அம்சமாகவே உள்ளது. கொரோனாவில் இருந்து 58,24,462 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,05,554 ஆக உயர்ந்துள்ளது. இறப்புவிகிதம் 1.55 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் 9,02,972 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது மொத்த பாதிப்பில் இது 13.44 சதவிகிதம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
India’s Covid-19 recoveries 58,24,462 This data from Worldometer lists the countries most affected by the coronavirus pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X