இந்தியா முழுக்க கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் ரத்து! 2 ஆண்டுக்கு பின் மத்திய அரசு அதிரடி உத்தரவு
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலால் மத்திய அரசு வழிக்காட்டலில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 31ல் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ளது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளன.
Recommended Video

இந்தியாவில் கொரோனா 3 அலைகளாக பொதுமக்களை தாக்கியுள்ளது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமானர்கள் பலியாகி உள்ள நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தியா முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு அமலாகின. இதில் ஏராளமான மக்கள் பொருளாதாரத்தை இழந்து கஷ்டப்பட்டனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

மாநிலங்களுக்கு கடிதம்
இந்நிலையில் தான் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

நீட்டிக்க விரும்பவில்லை
"கொரோனாவை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்டிஎம்ஏ) வழிகாட்டுதலின் பேரில் மத்திய உள்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் உத்தரவுகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. மேலும் கொரோனா தொடர்பாக 2022 பிப்ரவரி 25ல் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகள் மார்ச் 31ல் முடிவுக்கு வருகின்றன. பாதிப்பு தற்போது குறைந்துள்ளதால் இதை நீட்டிக்க விரும்பவில்லை. இருப்பினும் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை சானிடைசரால் அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம்'' என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நோய் உறுதி சதவீதம் குறைவு
மேலும், ‛‛இந்தியாவில் தற்போது 23,913 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளர். தினசரி நோய் உறுதி செய்யும் சதவீதம் 0.28 ஆக குறைந்துள்ளது. தற்போது வரை 181.56 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிக்கான வெற்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

2 ஆண்டுகள்
இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசின் கொரோனா வழிக்காட்டுதல் விதிமுறைகள் முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளன. இந்தியாவில் 2020 மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு துவங்கியது. அன்று முதல் மத்திய உள்துறை அமைச்சர் வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. சுமார் 2 ஆண்டுகள் ஆன நிலையில் மத்திய அரசு அதனை கைவிடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications