கேரளாவில் 2 டோஸ் போட்டவர்களையும் தாக்கும் கொரோனா.. ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்.. முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறது.கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் தினமும் 22,000 பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சியை கொடுக்கின்றன.

நேற்று மட்டும் கேரளாவில் 21,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகின. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக பல்வேறு பாராட்டுகளை பெற்றது கேரளா.

திணறும் கேரளா

திணறும் கேரளா

ஆனால் கொரோனா இரண்டாவது அலை கேரளாவின் நற்பெயரை எல்லாம் அடித்து சென்று விட்டது. தற்போது நாட்டில் ஏற்படும் மொத்த பாதிப்பில் சுமார் 40 சதவீத பாதிப்புகள் கேரளாவில் மட்டுமே எற்பட்டு வருகின்றன. கொரோனா நேர்மறை விகிதம்(பாஸிடிவ் ரேட்) தொடர்ந்து 13 சதவீதத்துக்கு மேல் இருப்பதால் கேரளாவில் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. தொடர்ந்து அதிக அளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த போதிலும் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

இரண்டு டோஸ்

இரண்டு டோஸ்

இந்த நிலையில் முதல் டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு கேரளாவில் 80,000 கொரோனா மறு நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மத்திய உயர் சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளன.இரண்டாவது டோஸுக்குப் பிறகு 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு நாடு முழுவதும் 87,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அந்த பாதிப்புகளில் 46 சதவிகிதம் கேரளாவைச் சேர்ந்தவை என்று புள்ளி விவரம் கூறுகின்றன.

வைரஸ் பிறழ்வு இருக்கிறதா?

வைரஸ் பிறழ்வு இருக்கிறதா?

கேரளாவில் இதுவரை வைரஸ் பிறழ்வு அல்லது மாறுபாடு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றுகள் வலுவாகி வருவது மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வைரஸ் பிறழ்வு எப்போதும் தொற்றுநோயின் புதிய அலைகளைத் தூண்டுகிறது. ஆனால் கேரளாவில் எந்தவித வைரஸ் பிறழ்வும், மாறுபாடும் இன்றி பாதிப்பு பரவுவது அதிர்ச்சியை ஏற்படுத்த்துவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீவிர பரிசோதனை

தீவிர பரிசோதனை

கேரளாவில் விரைவாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் தொற்று குறையாதது புரியாத புதிராகவே இருக்கிறது. 100 சதவிகித தடுப்பூசி அளவு செலுத்திய வயநாட்டில் இருந்து அதிக அளவு பாதிப்புகள் பதிவாகி வருவது சுகாதாரத்துறை அதிகாரிகளை திணறடித்து வருகிறது. கேரளாவில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் தீவிர பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+