மீண்டும் அச்சுறுத்தும் 'R-factor..' 2ஆம் அலையில் இருந்ததைவிட மோசம்..3ஆம் அலை தொடக்கமா? புது வார்னிங்
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் முதல் பாதியில் குறைந்து வந்த R-factor, பிற்பகுதியில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2ஆம் அலை தொடக்கத்தில் இருந்ததைவிட R-factor அதிகமாக உள்ளதால், வரும் பண்டிகை காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி கொரோா பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டியது.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளால் நிரம்ப தொடங்கின. அப்போது ஏற்பட்ட நிலையை யாராலும் மறந்துவிட முடியாது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் பல வாரங்கள் தொடர்ந்த 2ஆம் அலை நீண்ட இடைவெளிக்குப் பின்னரே கட்டுக்குள் வரத் தொடங்கியது. அதன் பிறகு நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. கேரளாவைத் தவிர பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா கட்டுக்குள்ளேயே உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை உணர்த்தும் R-factor கடந்த 15 நாட்களில் 1.2ஆக அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,

R-factor என்றால் என்ன
R-factor என்பது ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் கொரோனா பரவல் வேகம் எந்தளவு உள்ளது என்பதை குறிக்கும் ஒன்றாகும். அதாவது ஒரு நபர் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா பரவுகிறது என்பதை R-factorஐ வைத்துக் குறிப்பிடுவார்கள். ஒரு நபருக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பின் மூலம் 2 பேருக்கு அது பரவினால் R-factor 2ஆக இருக்கும். R-factor ஒன்றுக்குக் கீழ் இருந்தால், வேகம் குறைவாகப் பரவுகிறது, புதிய கேஸ்கள் குறையும் என அர்த்தம்.

மீண்டும் அதிகரிக்கும் R-factor
இந்தியாவில் 2ஆம் அலைக்குப் பின்னர் R-factor தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம் 2ஆம் பாதிக்குப் பின்னர் நிலைமை அப்படியே மாறியது. ஆகஸ்ட் 14-17 வரை R-factor 0.89ஆக இருந்த நிலையில், அது ஆகஸ்ட் 24-29 வரையிலான தேதிகளில் 1.17ஆக அதிகரித்துள்ளது. இது 2ஆம் அலை தொடக்கத்தில் இருந்த 1.03ஐ விட அதிகம் என்பது அச்சுறுத்தும் செய்தியாகும். கேரளா, மகாராஷ்டிரா (1.06), ஆந்திரா (1.09) மிசோரம் (1.36) , காஷ்மீர் (1.25) ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக R-factor ஒன்றைக் கடந்துள்ளது.

எந்தளவு ஆபத்து
இதை 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் இருந்த R-factor உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நிலைமையின் தீவிர தன்மை நமக்குப் புரியும். கடந்த மார்ச் முதல் ஏப்ரல் 21 வரை, 2ஆம் உச்சத்தில் இருந்த சமயத்தில் நாட்டின் R-factor 1.37ஆக இருந்தது. அதன் பிறகு குறையத் தொடங்கிய இது, மே 15 முதல் ஜூன் 26 வரையிலான காலகட்டத்தில் 0.78ஆக இருந்தது. அதன் பிறகு மெல்ல அதிகரித்து ஜூன் 20 - ஜூலை 7 காலகட்டத்தில் 0.95, ஜூலை 3-22 காலத்தில் 0.96, ஜூலை 24-27 காலத்தில் 0.96ஆக R-factor இருந்தது. 2ஆம் அலைக்குப் பின்னர் முதல் முறையாகக் கடந்த ஜூலை 27-31 காலகட்டத்தில் R-factor 1.03ஆக அதிகரித்தது.

எச்சரிக்கை தேவை
அதன் பிறகு தொடர்ந்து குறைந்த R-factor, ஆகஸ்ட் 6-9 காலகட்டத்தில் 0.92ஆகவும், ஆகஸ்ட் 14-17 காலகட்டத்தில் 0.89 வரையிலும் குறைந்தது. இப்படித் தொடர்ந்து குறைந்த R-factor, இப்போது மீண்டும் அதிகரித்து 1.17ஆகச் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது 3ஆம் அலையின் தொடக்கமாகக் கூட இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்து வரும் காலங்களில் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால் 3ஆம் அலையை யாராலும் தடுக்க முடியாது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications