டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

15-18 வயது சிறார்களுக்கான வேக்சின் முன்பதிவு தொடங்கியது.. ரிஜிஸ்டர் செய்வது எப்படி? FULL GUIDE

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான வேக்சின் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. வேக்சின் பெற தகுதி உள்ள சிறார்கள் Cowin தளத்தில் முன் பதிவு செய்யலாம் என்று அதன் தலைவர் டாக்டர் ஆர்எஸ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி 3ல் இருந்து 15-18 வயது கொண்டவர்களுக்கு கொரோனா வேக்சின் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக வேக்சின் போடாதவர்கள் அதிகம் பாதிக்கும் அச்சம் நிலவி வருகிறது.

இதையடுத்து ஜனவரி 3ல் இருந்து இந்தியாவில் 15-18 வயது கொண்டவர்களுக்கு கொரோனா வேக்சின் வழங்கப்படும், ஜனவரி 10 ம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், உடல் உபாதைகள் கொண்ட வயதானவர்கள் ஆகியோருக்கு "முன்னெச்சரிக்கை டோஸ்கள்" எனப்படும் மூன்றாவது டோஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Omicron: 2 டோஸ் வேக்சின் போட்டுட்டீங்களா? உங்களுக்கு இந்த 8 அறிகுறிகள் இருந்தால்- உடனே டெஸ்ட் எடுங்கOmicron: 2 டோஸ் வேக்சின் போட்டுட்டீங்களா? உங்களுக்கு இந்த 8 அறிகுறிகள் இருந்தால்- உடனே டெஸ்ட் எடுங்க

 இன்று தொடக்கம்

இன்று தொடக்கம்

இந்த நிலையில் 15-18 வயது சிறார்களுக்கான வேக்சின் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. கோவின் தளத்தில் சிறார்கள் தங்கள் முன் பதிவை செய்து கொள்ள முடியும். நேரடியாக பதிவு செய்ய விரும்பும் நபர்கள், வேக்சின் போடும் மையத்திற்கு ஜனவரி 3ம் தேதி நேராக சென்று அங்கு பதிவு செய்து வேக்சின் போட்டுக்கொள்ள முடியும்.

எப்படி

எப்படி

சிறார்கள் வேக்சின் முன் பதிவை செய்ய பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும்.

https://www.cowin.gov.in/ தளத்தில் இதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி இன்று அமலுக்கு வரும்.

இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும்.

வயது முக்கியம்

வயது முக்கியம்

வயதானவர்கால் எப்படி ரிஜிஸ்டர் செய்தனரோ அதேபோல் செய்தால் போதும். அப்பா, அம்மாவின் போன் எண் கொடுத்து ஓடிபி மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

ஆனால் அதே சமயம் பலரிடம் ஆதார் இருக்காது. 18 வயது குறைவானவர்கள் என்பதால் வேறு அடையாள அட்டை இருக்காது. எனவே இவர்கள் பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதும்.

இதில் அவர்களின் பெயர்கள் மற்றும் 15-18 வயது கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் விவரம் இருக்க வேண்டும்.

Recommended Video

    ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. பிரதமர் மோடி தகவல்
    தேர்வு செய்யும் வசதி

    தேர்வு செய்யும் வசதி

    அதே சமயம் சிறார்களுக்கு என்ன வேக்சின் போடலாம் என்பதை பெற்றோரே தேர்வு செய்ய முடியும்.

    15-18 வயது கொண்டவர்களுக்கு இந்தியாவில் கோவாக்சின், சைட்ஸ் கேடில்ல்லா நீடில் இல்லாத வேக்சின் இரண்டும் வழங்கப்படுகிறது.

    இந்த இரண்டில் ஒன்று தேர்வு செய்யலாம்.

    English summary
    COVID Vaccine Registration For 15 To 18 Years Starts today: Step-By-Step Guide to register.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X