• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடுத்த 3 சீசன்களுக்கு கலக்கவுள்ள தல தோனி.. சிஎஸ்கே தக்க வைக்கும் மற்ற 3 வீரர்கள் யார்? பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: தல தோனியை சிஎஸ்கே அணி நிர்வாகம் அடுத்த 3 சீசன்களுக்கு தக்க வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆல் ரவுண்டர் ஜடேஜா, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் தக்க வைக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

  CSKs Update on Bravos Retention on ipl 2022 | OneIndia Tamil

  அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் புதிதாக உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்தை அடிப்படையாகக் கொண்டு 2 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

  சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பிசர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி

  இதன் காரணமாக அனைத்து அணிகளும் பங்கேற்கும் வகையில் மெகா ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ விதிகளின்படி ஒரு அணி அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

  அடுத்த 3 சீசன்களுக்கு தல தோனி

  அடுத்த 3 சீசன்களுக்கு தல தோனி

  ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழும் சிஎஸ்கே அணி தல தோனி தக்க வைக்கும் என்பது ஏற்கனவே கிட்டதட்ட உறுதியாகவே தெரிந்தது. இந்தச் சூழலில் தல தோனியை அடுத்த 3 சீசன்களுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக இந்தின் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஆல் ரவுண்டர் ஜடேஜா, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் தக்க வைக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

  4ஆவது வீரர் யார்

  4ஆவது வீரர் யார்

  பிசிசிஐ விதிகளின்படி ஒரு அணி 3 இந்திய வீரர்களையும் ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்க வைக்கலாம். இதனால் 4ஆவது வீரராக இங்கிலாந்தின் மொயின் அலி தக்க வைக்க சிஎஸ்கே நிர்வாகம் விரும்புவதாகவும் இது குறித்து அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்தின் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் சென்னையில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ள நிலையில் மொயின் அலி போல ஒரு சுழற்பந்து வீச்சாளர் இருப்பது அணிக்குச் சாதமாகவே இருக்கும்.

  சில நாட்களில் இறுதி முடிவு

  சில நாட்களில் இறுதி முடிவு

  ஒருவேளை சில காரணங்களால் மொயின் அலி சிஎஸ்கேவின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மற்றொரு இங்கிலாந்து வீரர் சாம் கரனை தக்க வைக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. வரும் நவ. 30ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்புக்கு அளிக்க வேண்டும் என்பதால் இன்னும் சில நாட்களில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  கடைசி ஆட்டம் சென்னை தான்

  கடைசி ஆட்டம் சென்னை தான்

  சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை தக்க வைத்தது யாருக்கும் ஆச்சரியமில்லை. சிஎஸ்கே அணியைப் பல சீசன்களாக வெற்றிகரமாக வழிநடத்தும் தல தோனியால் சிஎஸ்கே அணியின் பிராண்ட் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்திய முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற சிஎஸ்கே வெற்றி நிகழ்வில் பேசும்போது கூட தனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில் தான் இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது,

  சுரேஷ் ரெய்னா இல்லை

  சுரேஷ் ரெய்னா இல்லை

  அதேபோல ஐபிஎல் தொடங்கியது முதலே சிஎஸ்கே அணியின் மற்றொரு முக்கிய வீரராக வலம் வருபவர் சின்ன தல சுரேஷ் ரெய்னா. கடந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சில தனிப்பட்ட காரணங்களால் சுரேஷ் ரெய்னா கடைசி நேரத்தில் பங்கேறவில்லை. இந்நிலையில், சிஎஸ்கே வரலாற்றில் முதல்முறையாக சுரேஷ் ரெய்னா தக்க வைக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிய ரெய்னா, இந்தாண்டு கடைசி சில போட்டிகளிலும் பிளேயிங் 11இல் இடம்பெறவில்லை.

  டெல்லி கேப்பிடல்ஸ்

  டெல்லி கேப்பிடல்ஸ்

  அதேபோல டெல்லி கேப்பிடல்ஸ் அணி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஆல்ரவுண்டர் அக்சர் படேல், பிரித்வி ஷா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. டெல்லி அணியின் கேப்டான தான் இருக்க வேண்டும் என ஷ்ரேயாஸ் ஐயர் விரும்பினார். இருப்பினும், அணி நிர்வாகத்தின் பந்திற்கே ஆதரவாக இருந்ததால் ஷ்ரேயாஸ் ஐயர் தக்க வைக்கப்படவில்லை,

  மற்ற அணிகள்

  மற்ற அணிகள்

  சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் 4 வீரர்களைத் தக்க வைத்துள்ள நிலையில், பெரும்பாலான அணிகள் நான்கு வீரர்களைத் தக்கவைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், 4 வீரர்களையும் தக்க வைத்தால் ஏலத்தின் போது பயன்படுத்தக் கூடிய தொகை குறையும். இது அணி நிர்வாகத்திற்கு அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே மற்ற அணிகள் நான்கு வீரர்களைத் தக்க வைக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

  மும்பை இந்தியன்ஸ் அணி

  மும்பை இந்தியன்ஸ் அணி

  மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிகிறது. அதேபோல வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்டு உடனான பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது. மேலும், இஷான் கிஷான் வைப்பது குறித்தும் அந்த அணி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இவர்களைத் தவிர சூர்யகுமார் யாதவை ஏலத்தில் வாங்கவும் மும்பை விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர்கள் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரை தக்க வைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. மேலும் வருண் சக்ரவர்த்தியையும் தக்க வைக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. சுப்மான் கில் அல்லது வெங்கடேஷ் ஐயர் இருவரில் ஒருவரைத் தக்க வைப்பது குறித்து கேகேஆர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  புதிய அணிகள்

  புதிய அணிகள்

  அதேபோல புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு அணிகளும் ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சூர்யகுமார் யாதவையும் அணி நிர்வாகம் அணுகியுள்ளது. இருப்பினும், அவர் எவ்வித பதிலும் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.

  English summary
  Chennai Super Kings has decided to retain Mahendra Singh Dhoni for the next three Indian Premier League seasons. IPL teams retain players list.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X