ஆட்டத்தை மெதுவாக ஆரம்பித்த கொரோனா! தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது! உஷார் நிலையில் மத்திய அரசு!
டெல்லி : நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் தினசரி ஒரு நாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பையும், உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது.
சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இரண்டாவது அலை, மூன்றாவது அலை என தனது ஆட்டத்தை காட்டத் தொடங்கிய கொரோனா பாதிப்பு, இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதளபாதாளத்தை நோக்கிச் சென்றது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

8,329 பேர் பாதிப்பு
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,213,435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்தனர்.

சிகிச்சை பெறுவோர்
கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 40 ஆயிரத்து 370 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,791 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

கொரோனா தடுப்பூசி
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,48,308 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 15,43,748 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும், மொத்தம் 194 கோடியே 82 லட்சத்து 14 ஆயிரத்து 387 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications