ஷாக்.. கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி கொன்ற 2வது மனைவி.. பின்னணியில் உள்ள காரணத்தை பாருங்களேன்!
டெல்லி: சத்தீஸ்காரில் கருப்பாக இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டு வந்த கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி 2வது மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
திருமணமான பிறகு தம்பதி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இதில் பெரும்பாலானவர்கள் இடையேயான பிரச்சனை உடனடியாக தீர்வுக்கு வந்துவிடும்.
இருப்பினும் சில தம்பதி இடையேயான பிரச்சனை மிகப்பெரியதாக மாறி கொலையில் முடிந்துவிடும். அந்த வகையில் தான் மனைவியின் நிறத்தை கூறி தகராறு செய்து வந்த கணவரை கொடூரமாக மனைவி கொலை செய்துள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:

2வது திருமணம்
சத்தீஸ்கார் துர்க் அம்லேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சோன்வானி (வயது 40). இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து ஆனந்த சோன்வானி சங்கீதா (30) என்பவரை 2வது திருமணம் செய்தார். திருமணமான புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர்.

நிறத்தை கூறி கிண்டல்
அதன்பிறகு சங்கீதா கருப்பாக இருப்பதாக ஆனந்த் அடிக்கடி கூறியுள்ளார். மேலும் கேலி, கிண்டலும் செய்துள்ளார். இதனை சங்கீதா கடுமையாக கண்டித்துள்ளார். இருப்பினும் ஆனந்த் தனது செயலை மாற்றி கொள்ளவில்லை. வீட்டில் மட்டுமின்றி பொது இடங்களிலும் மனைவி சங்கீதாவை கருப்பாக இருப்பதாக கூறி வந்துள்ளார். இதனால் சங்கீதா மனம் உடைந்தார்.

அந்தரங்க உறுப்பை வெட்டி கொலை
மேலும் இந்த விஷயம் தொடர்பாக அடிக்கடி கணவன்-மனைவி இடைரே தகராறு ஏற்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த விஷயத்தில் கணவன் -மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போதும் சங்கீதா கருப்பு நிறம் ஆனந்த் கூறியுள்ளார். இதனால் சங்கீதா கோபத்தின் உச்சத்துக்கு சென்றார். மேலும் தனது வீட்டில் இருந்த கோடரியை எடுத்து கணவரை தாக்கினார். மேலும் அந்தரங்க உறுப்பையும் அவர் வெட்டி கொலை செய்தார்.

நாடகமாடி சிக்கிய மனைவி
இதற்கிடையே தான் தண்டனையை நினைத்து சங்கீதா பதற்றம் அடைந்தார். மேலும் கொலையை மறைக்க அவர் முடிவு செய்தார். இதற்காக அவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று அதிகாலை சங்கீதா கண்விழித்து அக்கம்பக்கத்தினரை எழுப்பி தனது கணவரை யாரோ ஒருவர் கொலை செய்து விட்டு சென்றதாக கூறி அழுதார். இருப்பினும் போலீசார் வந்து மனைவி சங்கீதாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் கொலை செய்து கொண்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications