டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது ரொம்ப ஓவர்.. அதானி நிறுவனத்துக்கு பறந்த “ரெட் அலர்ட்” - உலகின் 4வது பணக்காரருக்கு வந்த சோதனை

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் 4 வது பெரும் பணக்காரராக உயர்ந்த இந்தியாவின் கவுதம் அதானியின் குழுமத்துக்கு கடன் ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த கவுதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாக இமாலய வளர்ச்சியை அடைந்து இருக்கிறார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம்.

இப்படி தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை முறியடித்தார்.

சக்சஸ்- மன்னார், பூநகரியில் மெகா காற்றாலை மின் திட்டம்: அதானி குழுமத்துக்கு அனுமதி கொடுத்தது இலங்கை!சக்சஸ்- மன்னார், பூநகரியில் மெகா காற்றாலை மின் திட்டம்: அதானி குழுமத்துக்கு அனுமதி கொடுத்தது இலங்கை!

 உலக பணக்காரர்கள் பட்டியல்

உலக பணக்காரர்கள் பட்டியல்

தொடர்ந்து முன்னேறிய அதானி ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் இருந்த அதானி படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறினார்.

தொடர்பில்லாத வணிகம்

தொடர்பில்லாத வணிகம்

இந்த நிலையில் கடன் சுமை, கடன் நிலுவைத் தொகைகள், அரசு, சமூக ரீதியான காரணங்கள், அதானி குழுமத்தில் விரிவாக்க பணிகள் போன்றவற்றால் அந்த நிறுவனத்துக்கு அபாயம் ஏற்படலாம் என்று கடன் ஆராய்ச்சி நிறுவனம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. தொடர்பில்லாத வணிகங்களில் அதானி குழுமம் கால்பதிப்பதும் இதற்கான காரணம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அதிக கடன்

அதிக கடன்

பிட்ச் குழுமத்தின் கிரெட் சைஸ் என்ற கடன் கடன் ஆராய்ச்சி குழுமம் வெளியிட்டு இருக்கும் இந்த அறிக்கை, மிக அதிக கடன் சுமை என்ற தலைப்புடன் வெளியாகி இருக்கிறது. அதானி குழுமத்தின் நிதி நிலை தொடர்பான பல்வேறு தரவுகளை ஆய்வு செய்துள்ள இந்த நிறுவனம், அதானி குழுமம் மிகப்பெரிய அளவில் கடன் பெற்று தொழில் விரிவாக்கம் செய்வதை எச்சரிக்கையும் அனுக வேண்டும் என்று கூறி இருக்கிறது.

பங்குகள் வீழ்ச்சி

பங்குகள் வீழ்ச்சி

அதானி குழுமம் பெருமளவிலான தொழில்களுக்கு வங்கிகளிடம் அதிகளவில் கடன் வாங்கியே முதலீடு செய்வதாகவும், இதனால் அந்நிய செலாவணி மற்றும் கடன் தொகையை திருப்பி செலுத்தும்போது சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கணித்துள்ளது. அதிக கடன் பெற்று வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது மிகப்பெரிய கடன் பொறியில் சிக்குவதற்கான அபாயம் உள்ளதாக எச்சரித்து இருக்கிறது. இந்த அறிக்கை வெளியான பிறகு அதாரி பவர், அதானி வில்மர், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிவடைய தொடங்கின.

English summary
Debts are too high - Red alert for Adani group of companies: உலகின் 4 வது பெரும் பணக்காரராக உயர்ந்த இந்தியாவின் கவுதம் அதானியின் குழுமத்துக்கு கடன் ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X