டெல்லியில் நிதி அமைச்சக உயர் அதிகாரி கார் மோதி பலியான சம்பவம்.. வெளி வந்த பரபர தகவல்கள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில், நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி பலியானார். இந்த விபத்தை ஏற்படுத்தியவர் பெண் தொழிலதிபர் என்பதும் தெரியவந்துள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்காமல் 19 கிலோ மீட்டர் தொலைவில் தனக்கு தெரிந்த மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்துள்ளார். இதனால், விபத்து ஏற்படுத்தியதில் இருந்து தப்பிப்பதற்காக அவர் ஏதேனும் சதித் திட்டம் தீட்டினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
டெல்லி ஹரி நகரைச் சேர்ந்தவர் நவ்ஜோத் சிங் (வயது 52). இவர் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையில் துணைச் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவரும், இவருடைய மனைவியும் விடுமுறையையொட்டி இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் இருக்கும் பங்களா சாஹிப் குருத்வாராவுக்கு பைக்கில் சென்றனர்.

பிஎம்.டபிள்யூ கார் மோதி விபத்து
அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பினர். தவ்லாகபாத் பகுதியில் அவர்கள் சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு பிஎம்டபிள்யூ சொகுசு கார் பைக் மீது மோதியது. இதில் நவ்ஜோத் சிங் உயிரிழந்தார். இந்த விபத்தில் காரும் சேதம் அடைந்திருந்தது. காரில் குருகிராமைச் சேர்ந்த தொழில் அதிபர் பரீக்ஸ் மக்கர் மற்றும் அவருடைய மனைவி ககன்தீப் கவுர் (வயது 38) ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் லேசான காயம் அடைந்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். விபத்தை ஏற்படுத்தி ஒரு உயிர் போக காரணமாக இருந்த ககன்தீப் கவுர் கைது செய்யப்பட்டார். இவர்தான் காரை ஓட்டிச் சென்றுள்ளார். ககன்தீப் கவுரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
19 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனையில்
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் பலியான நவ்ஜோத் சிங் சித்தியின் மனைவி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
"விபத்து நடந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு என்னையும் எனது கணவரையும் அழைத்து செல்லுமாறு, விபத்தை ஏற்படுத்திய பெண்ணிடம் பலமுறை கெஞ்சி கேட்டேன். ஆனால் இதை ஏற்க மறுத்த அந்த பெண், 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்" என்றார். "வேண்டும் என்றே அருகில் உள்ள மருத்துவமனையில் எனது பெற்றோரை அனுமதிக்கவில்லை" என்று நவ்ஜோத் சிங்கின் மகன் குற்றம் சாட்டியிருந்தார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்
"தமது கணவர் விபத்து நடந்தவுடன் உயிருடன் இருந்ததாகவும், அருகில் உள்ள மருத்துவமனையில் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் விபத்தை ஏற்படுத்திய பெண் அதனை ஏற்க மறுத்ததாகவும்" கூறினார். இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், ககன்தீப் கவுர் கூறும்போது, "அந்த மருத்துவமனையில் கொரோனா காலத்தில் நான் சிகிச்சை பெற்றேன். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அந்த நேரத்தில் என் மனதில் அந்த ஒரு மருத்துவமனை மட்டுமே நினைவுக்கு வந்தது" என்றார்.
டெல்லியை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் கூறுகையில்:
"கவுர் மது போதையில் இருந்தாரா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். அதிவேகத்தில் கார் வந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications