லாரியில் கொண்டு வரப்பட்ட கற்கள்.. மொத்தமாக கொளுத்தப்பட்ட மார்க்கெட்.. டெல்லி கலவரம்.. ஷாக் வீடியோ!

டெல்லியில் நடக்கும் கலவரத்தில் நடந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடந்து வரும் கலவரத்தில் நடந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகிறது. நேற்று மொத்தமாக மார்க்கெட் ஒன்று இந்த கலவரத்தில் கொளுத்தப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Clashes broke out in Delhi as pro and anti CAA protesters

    டெல்லியில் நேற்று மாலையில் இருந்து நடக்கும் கலவரத்தில், மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் போலீஸ்காரர் ஒருவரும் பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த பெரும் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். நேற்று மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி போலீஸ்

    இந்த கலவரத்தில் டெல்லி போலீசும் களமிறங்கி கல் வீசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் போலீஸ் இந்த கலவரத்தை தடுப்பதை விட அதை தீவிரமாக்கவே முயன்றுள்ளனர். கலவரக்காரர்கள் உடன் சேர்ந்து இவர்கள் மக்கள் மீது கற்களை வீசி உள்ளனர். பாகுபலி படத்தில் போருக்கு செல்வது போல திட்டமிட்டு இவர்கள், மக்களை கற்களை வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    என்ன மார்க்கெட்

    அதேபோல் டெல்லியில் இருக்கும் கோகுல்புரி மார்க்கெட் மொத்தமாக தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது பழைய கார்கள், பைக்குள் விற்கும் மார்க்கெட் ஆகும். இங்கு கார் தொடர்பான டயர் போன்ற உதிரி பாகங்களும் விற்கப்படும். இங்கு இஸ்லாமியர்கள் பலர் கடை வைத்துள்ளனர். இந்த மொத்த மார்க்கெட்டும் நேற்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் டெல்லியின் மாசு ஒரே நாளில் அதிகரித்தது.

    போலீஸ் இளைஞர்

    இதில் போலீசை நோக்கி இளைஞர் ஒருவர் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சென்ற வீடியோவும் வைரலாகி உள்ளது. நேற்று இந்த கலவரத்தின் போது போராட்டக்காரர்களை நோக்கி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி துப்பாக்கியால் சுட்ட நபரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் சிஏஏ போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் 8 முறை சுட்டு இருக்கிறார். இவரின் அடையாளம் காணப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    கற்கள் எப்படி

    டெல்லியில் சந்த்பாஹ், ஜாபர்பேட் பகுதிகளில் இந்த கலவரம் நடக்கிறது. இதனால் டெல்லியின் பல பகுதிகளில் இருந்து இந்த கலவரத்திற்காக லாரியில் கற்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. லாரியில் கற்கள் வந்து இறங்கும் காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த கலவரம் சிஏஏ போராட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்று நிரூபணம் ஆகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+