டெல்லியில் டிராபிக் போலீஸ் மீது காரை ஏற்றி இழுத்துச்சென்ற டிரைவர் கைது - வைரல் வீடியோ
டெல்லியில் டிராபிக் போலீஸ் மீது காரை ஏற்றி இழுத்துச்சென்ற டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த டிராபிக் போலீஸ் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்று கீழே தள்ளிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பரபரப்பான சாலையில் கார் மீது டிராபிக் போலீஸ் தொங்கிக்கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள துவாலா கவுன் நகரில் கடந்த 12ஆம் தேதி போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. போக்குவரத்து விதிகளை மீறியதாக அந்த காரை காவல்துறையினர் நிறுத்தினர்.

அதை சட்டை செய்யாத டிரைவர் டிராபிக் போலீஸ் மீது காரை ஏற்றினார். அந்த காவலர் கார் பானட்டில் நின்று தொங்கிக்கொண்டு பயணம் செய்தார். பரபரப்பான சாலையில் அந்த கார் பயணித்தது. திடீரென அந்த காவலர் நடு சாலையில் காரில் இருந்து கீழே விழுந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. டிராபிக் போலீஸ் மீது காரை ஏற்றிய டிரைவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
#WATCH An on-duty Delhi Traffic Police personnel in Delhi's Dhaula Kuan dragged on the bonnet of a car for few metres after he attempted to stop the vehicle for a traffic rule violation. The car driver was held later.(12.10.20) #Delhi pic.twitter.com/R055WpBm8M
— ANI (@ANI) October 15, 2020
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications