டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிக்கன் ஆர்டர் செய்தவருக்கு எலும்பு டெலிவரி.. கூடவே ஒரு லெட்டர்.. டெலிவரி பாய் செய்த பகீர் சம்பவம்

Google Oneindia Tamil News

டெல்லி: சிக்கனை சாப்பிட்டுவிட்டு வெறும் எலும்பை மட்டும் டெலிவரி செய்ததோடு மன்னிப்பு கேட்டு கஸ்டமருக்கு கடிதம் எழுதிய உணவு டெலிவரி பாயின் செயல் வைரலாகி வருகிறது.

அன்றெல்லாம் ஹோட்டலுக்கு போய் உணவு அருந்தி வந்தோம். இல்லாவிட்டால் பார்சலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சாப்பிடுவோம். ஆனால் இன்று அப்படி இல்லை. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்காமல் எந்த கடை வேண்டுமோ அந்த கடையின் உணவை வீட்டில் உட்கார்ந்தபடியே ஆர்டர் செய்யும் வசதி வாய்ப்பும் கிடைத்துள்ளது.

சைவம் முதல் அசைவம் வரை டீ, காபி, ஜூஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்டவைகளை ஆர்டர் செய்து சுவைக்கலாம். உணவு டெலிவரி செய்யும் நபர்கள் கஸ்டமரின் போன் எண்ணின் சிக்னலை வைத்து வீட்டை கண்டுபிடித்து டெலிவரி செய்கிறார்கள். இது போல் டெலிவரி செய்யும் போது டெலிவரி பாய்களுக்கும் கஸ்டமருக்கும் நிறைய இடையூறுகள் இருக்கும்.

விஜய் டயலாக்.. வேற வெர்சனில் சொன்ன செல்லூர் ராஜு! எத்தனை தீர்ப்பு வந்தாலும் எடப்பாடி தானாம் விஜய் டயலாக்.. வேற வெர்சனில் சொன்ன செல்லூர் ராஜு! எத்தனை தீர்ப்பு வந்தாலும் எடப்பாடி தானாம்

டெலிவரி பாய்

டெலிவரி பாய்

டெலிவரி பாயை கஸ்டமர் தாக்குவதும், உணவு பாக்கெட்டில் டெலிவரி பாய் எச்சில் துப்பி வைப்பதும் கஸ்டமருக்கான உணவை தானே சாப்பிட்டுவிடுவதும் என இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்விக்கியில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த நபருக்கு ஆணுறை டெலிவரி செய்யப்பட்ட ஷாக் சம்பவங்களும் நடந்துள்ளன.

டோர் டேஷ் செயலி

டோர் டேஷ் செயலி

அந்த வகையில் டோர் டேஷ் எனும் உணவு டெலிவரி செயலியில் பிரைடு சிக்கனை ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்தார். சரியான பசியுடன் சிக்கனுக்காக காத்திருந்த நபரின் வீட்டு காலிங் பெல் ஒலித்தது. ஓடி வந்தார், அவர் உணவு டெலிவரி செய்த செயலிலிருந்து ஊழியர் பார்சலை கொடுத்தார். நாக்கில் எச்சில் ஊறும் வகையில் அந்த பார்சலை பிரித்தார்.

எலும்புத் துண்டுகள்

எலும்புத் துண்டுகள்

அதில் வெறும் எலும்பு துண்டுகள் மட்டுமே இருந்தன. பசி மயக்கத்தில் சிக்கன் எலும்பாக தெரிகிறதோ என நினைத்து கண்களை கசக்கிவிட்டு மீண்டும் திறந்து பார்த்தார். அப்போதும் எலும்புதான் இருந்தது. அதன் அருகே ஒரு பேப்பர் போன்று மடித்திருந்தது. அதை பிரித்து படித்தார்.

பிரைடு சிக்கன்

பிரைடு சிக்கன்

அதில் "பிரைடு சிக்கனுடன் உங்களுக்கு டெலிவரி செய்ய வந்து கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு மிகவும் பசியாக இருந்தது. இதனால் ஆபத்துக்கு பாவமில்லை என கருதி சிக்கனை நான் சாப்பிட்டேன். எலும்பை உங்களுக்கு அனுப்பிவிட்டேன். பசியாற்றிக் கொள்ள என்னிடம் பணம் இல்லை என எழுதியிருந்தார்.

லெட்டர்

லெட்டர்

இந்த லெட்டரை படித்தவுடன் வாடிக்கையாளருக்கு கோபம் அதிகரித்துவிட்டது. டெலிவரி பாயை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் அன்றுதான் அந்த ஊழியரின் கடைசி பணிநாளாகும். இது குறித்து டெலிவரி செயலியில் கஸ்டமர் கேரில் புகார் கொடுத்த போது பணத்தை திருப்பி அளிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து உணவு டெலிவரி செய்த செயலிக்கு எதிராக அந்த வாடிக்கையாளர் ஒரு வழக்குப் பதிவு செய்தார். இதையடுதது கஸ்டமருக்கு அவரது பணமும் (ப்ரீயாக) பிரைடு சிக்கனும் கிடைத்தது. இந்த வழக்கில் என்ன நடந்தது, எதை வைத்து வாடிக்கையாளருக்கு இத்தகைய நிவாரணம் கிடைத்தது என தெரியவில்லை.

English summary
Delivery boy ate chicken and gave only bones to the customer and also he has written apology letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X