டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெகா ட்விஸ்ட்.. காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்.. திக் விஜய் சிங் இன்று விருப்பமனு தாக்கல்? பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று திக் விஜய் சிங் விருப்பமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏகப்பட்ட குழப்பங்களுடன், அரசியல் மோதல்களுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற இருக்கிறது.

அடுத்த திருப்பம்.. காங்கிரஸ் தலைவர் போட்டியில் திக்விஜய் சிங்.. கேரளாவில் இருந்து டெல்லி விரைந்தார் அடுத்த திருப்பம்.. காங்கிரஸ் தலைவர் போட்டியில் திக்விஜய் சிங்.. கேரளாவில் இருந்து டெல்லி விரைந்தார்

என்ன எதிர்பார்ப்பு

என்ன எதிர்பார்ப்பு

71 வயது நிரம்பிய மூத்த தலைவரான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் நேரு குடும்பத்திற்கு நெருக்கமான தலைவர். ஆனால் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. தான் பதவியை ராஜினாமா செய்தாலும் தனது ஆதரவாளர் மட்டுமே முதல்வர் ஆக வேண்டும் என்று இவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

மிரட்டல்

மிரட்டல்

அதோடு அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் முதல்வராகவும் இருக்கட்டும்.. தேசிய தலைவராகவும் இருக்கட்டும் என்று ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகின்றனர். 90 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய போவதாக காங்கிரஸ் தரப்பு மிரட்டி உள்ளனர். எம்எல்ஏக்கள் இப்படி போர்க்கொடி தூக்குவதற்கும்.. தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அசோக் கெலாட் கூறி விட்டார். இருந்தாலும் அவர்தான் சச்சின் பைலட்டுக்கு எதிராக எம்எல்ஏக்களை தூண்டி விடுகிறார் என்று கூறப்படுகிறது.

வேண்டாம்

வேண்டாம்

இந்த மோதல் காரணமாக அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று திக் விஜய் சிங் விருப்பமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அசோக் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் திக் விஜய் சிங் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 1993 முதல் 2003 இவர் மத்திய பிரதேச முதல்வராக இருந்துள்ளார்.

முதல்வர்

முதல்வர்

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது ராஜ்ய சபா எம்பியாக இருக்கிறார். காங்கிரசின் டாப் தலைவர்களுக்கு இவர் நெருக்கம். ராகுல் காந்தியுடன் இவர் பாரத் ஜோடோ யாத்திரையில் கேரளாவில் இருந்தார். இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அவர் டெல்லி வந்துள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்று அவர் டெல்லியில் வேட்புமனுவை வாங்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

English summary
Digvijaya Singh may contest for Congress chief election: May file nomination today .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X