Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிப்பு.. உலகில் 2வது பெரிய நாடாக மாறப்போகும் இந்தியா! ஆஹா

உலகில் லித்தியம் அதிகம் உள்ள நாடுகளில் சிலிக்கு அடுத்த படியாக இந்தியா 2வது இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதால் அமெரிக்கா, சீனா உள்பட ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவை திரும்பி பார்க்கும் நிலை உருவாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தற்போது ஒட்டுமொத்த உலகமும் மின்சார வாகனத்தை நோக்கி செல்லும் நிலையில் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியத்தின் தேவை என்பது அதிகமாக உள்ளது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்(59 லட்சம் டன்) லித்தியம் உலோகத்தின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகளவில் லித்தியம் இருப்பில் சிலிக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தை பிடிக்க உள்ளதால் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

இந்தியாவில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் சார்பில் நாட்டில் பல்வேறு இடங்களில் கனிமங்கள், தாது பொருட்கள் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் லித்தியம் எனும் உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ள ஆய்வில் இந்த லித்தியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. லித்தியம் என்பது தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமான உலோகமாகும்.

5.9 மில்லியன் டன்

5.9 மில்லியன் டன்

இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை திரும்பி பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்ககையில், ‛‛ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் சலால்-ஹைமானா பகுதியில் லித்தியம் உலோகத்தின் இருப்பு தெரியவந்துள்ளது. மிகப்பெரிய அகழாய்வு மூலம் இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் (59 லட்சம்) லித்தியம் உலோகம் இருக்கும் நிலையில் கர்நாடகா மாநிலம் மண்டியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,600 டன்கள் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பேட்டரி தயாரிப்புக்கு பயன்பாடு

பேட்டரி தயாரிப்புக்கு பயன்பாடு

தற்பாது கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் என்பது பேட்டரி தயாரிப்பில் முக்கியமான உலோகமாகும். தற்பாதைய சூழலில் இந்தியா உள்பட பல நாடுகள் பேட்டரி வாகனங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் லித்தியம் உலோகத்துக்கு அதிக கிராக்கி உள்ளது. இந்நிலையில் தான் இதுவரையில் இந்திய புவியியல் ஆய்வில் லித்தியம் தொடர்பான எந்த விபரங்களும் கிடைக்காத நிலையில் முதல் முறையாக இந்த அறிவிப்பு என்பது இந்தியாவின் பக்கம் உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது. தற்போதைய சூழலில் லித்தியம் சில நாடுகளில் மட்டுமே உள்ளது.

 2வது இடம் பிடிக்கும் இந்தியா

2வது இடம் பிடிக்கும் இந்தியா

இதனால் தான் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியத்தின் அளவு என்பது உண்மையில் மிகவும் பெரிய அளவு என கூறப்படுகிறது. உதாரணங்களுடன் கூறினால் இன்னும் எளிதாக புரியும். அதாவது உலகில் லித்தியத்தை அதிமகம் வைத்துள்ள நாடாக சிலி உள்ளது. சிலி நாட்டில் 9.2 மில்லியன் டன் லித்தியம் கையிருப்பில் உள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா 5.7 மில்லியன் டன்னுடன் 2வது இடத்திலும், சீனா 1.5 மில்லியன் டன்னுடன் 3வது இடத்திலும், பிரேசில் 95,000 கிலோவுடன் 5வது இடத்திலும், போர்ச்சுக்கல் 66,000 கிலோவுடன் 6வது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகத்திலேயே லித்தியம் இருப்பில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவாக உள்ளது.

ஆத்மநிர்பாருக்கு உதவும்

ஆத்மநிர்பாருக்கு உதவும்

இதுபற்றி கிரீன் ப்யல் எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அக்சய் காஷ்யப் கூறுகையில், ‛‛ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் இது மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தற்போது தனது லித்தியம் தேவையில் 70 சதவீதத்தை சீனா மற்றும் ஹாங்காங் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தற்போதைய கண்டுபிடிப்பு என்பது உண்மையில் 'ஆத்மநிர்பர்' திட்டத்தை ஊக்கப்படுத்தும். மேலும் புதுப்பிக்கத்தக்க வகையிலான ஆற்றல் துறையை மேம்படுத்தும். இந்தியா மின்சார வாகன பயன்பாட்டை 2030ம் ஆண்டுக்குள் 30 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கும், 2070க்குள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் உமிழ்வு அளவில் பூஜ்ஜியத்தை எட்ட இது அதன் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடைய உதவும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+