டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்காததில் அதிருப்திதான்..டிகேஎஸ் சகோதரர் ஓபன் அட்டாக்
டெல்லி: தமது சகோதரரும் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு கர்நாடகா முதல்வர் பதவி கிடைக்காமல் போனது அதிருப்தி அளிக்கிறது என அவரது சகோதரரும் எம்பியுமான டிகே சுரேஷ் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்றது காங்கிரஸ். இதனைத் தொடர்ந்து புதிய முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பதில் கடந்த 5 நாட்களாக குழப்பம் நீடித்து வந்தது. கர்நாடகா புதிய முதல்வராக சித்தராமையாவை நியமிக்க மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் தரப்பு கடுமையாக எதிர்த்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமான தமக்கே முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதி டிகே சிவகுமார் தரப்பு உறுதியாக இருந்தது. இதனால் டெல்லியில் கடந்த சில நாட்களாக அனைத்து கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களும் முகாமிட்டு இரவு பகலாக ஆலோசனைகள் நடத்தினர்.

இந்த விவகாரத்தில் நேற்று நள்ளிரவைத் தாண்டியும் ஆலோசனைகள் நடந்தன. இதனையடுத்து ஒருவழியாக கர்நாடகா முதல்வராக சித்தராமையா; துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்பார்கள் என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகின.
அதாவது 1) கர்நாடகா முதல்வராக சித்தராமையா 2) கர்நாடகா துணை முதல்வராக டிகே சிவகுமார் 3) கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராகவும் டிகே சிவகுமார் நீடிப்பார் 4) இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கர்நாடகா முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்பார் 5) கர்நாடகா புதிய அரசு மே 20-ல் பதவியேற்பது என டெல்லி கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது.

இத்தகவலை டிகே சிவகுமாரும் உறுதி செய்தார். டெல்லி செய்தியாளர்களி0டம் பேசிய டிகே சிவகுமார், சித்தராமையா முதல்வராவதில் என்ன தவறு என கூறியிருந்தார்.
ஆனால் டிகே சிவகுமாரின் சகோதரரான டிகே சுரேஷ் எம்பி, சித்தராமையா முதல்வர்; டிகே சிவகுமார் துணை முதல்வர் என்கிற இந்த பார்முலாவில் எங்களுக்கு திருப்தி இல்லை; நாங்கள் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை என்பது உண்மைதான். ஆனால் கன்னட மக்களின் நன்மைக்காக இதனை இப்போது ஏற்கிறோம். அடுத்து என்ன என்பதற்கு நீண்டகாலம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். டிகே சுரேஷ் எம்பியின் இந்த பேச்சு பரபரப்பை கிளப்பி உள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications