டோல்கேட்ட எப்ப சார் மூடுவீங்க? சொன்னீங்களே! செஞ்சீங்களா? நாடாளுமன்றத்தில் கொந்தளித்த செந்தில்குமார்
டெல்லி: 60 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள சுங்க சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தே 9 மாதங்கள் ஓடிவிட்டதாக மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், லோக் சபாவில் கேள்வி நேரத்தின்போது தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரையாற்றினார்.

3 மாதங்களுக்கு எத்தனை நாட்கள்?
அப்போது, 60 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச் சாவடிகள் 3 மாதங்களில் மூடப்படும் என உறுதியளித்தார். ஆனால், 3 மாதங்கள் முடிவடைந்து 9 மாதங்கள் ஆகிவிட்டது. மத்திய பாஜக அரசு மூன்று மாதங்களில் எத்தனை நாட்கள் உள்ளதாக கணக்கிட்டு வருகிறது?

தமிழ்நாட்டில் அதிக டோல்கேட்டுகள்
தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிக அளவிலான சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 57 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கணக்கிட்டு பார்த்தால் தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்து இருக்கும்.

சட்டப்பட்டி எத்தனை இருக்கலாம்?
ஆனால், சட்ட விதிகளின்படி தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். சேலம் - உளுந்துர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை எண் 79 ல் மட்டும் 11 ஆண்டுகளாக 3 டோல்கேட்டுகள் இயங்கு வருகின்றன. தமிழ்நாட்டில் 27 இடங்களில் நான்கு வழிச்சாலைகள் திடீரென இருவழிச் சாலைகளாக மாற்றம் செய்யப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

சட்டவிரோதமாக பண வசூல்
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான சுங்கச் சாவடிகளில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுகிறது. 100 மீட்டர் என்ற விதி சுங்கச் சாவடிகளில் கடைபிடிக்கப்படுவது கிடையாது. இடைவெளியில் காத்திருக்கும் வாகனங்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை என்ற விதியையும் கடைபிடிப்பது கிடையாது.

நீண்ட வரிசையில் வாகனங்கள்
குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் நெடும் வரிசையில் வாகனங்கள் காத்து இருக்கின்றன. சுங்கச் சாவடிகள் இதனை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் 10 வினாடி என்ற விதியையும் 100 மீட்டர் விதியையும் அனைத்து சுங்கச் சாவடிகளும் கடைபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications