டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பெரியார்".. 2 முக்கிய சம்பவம்.. பாராளுமன்றத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு எம்பிக்கள் -பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாடு எம்பிக்கள் 2 பேர் நேற்று நாடாளுமன்றத்தில் முக்கியமான இரண்டு தனி நபர் மசோதாக்களை தாக்கல் செய்தனர். இரண்டு மசோதாக்களும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. குடியரசுத் தலைவர் மீதான விவாதம் அவையில் நடந்து கொண்டு இருக்கிறது.

அதேபோல் கேள்வி நேரத்தில் எம்பிக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். மேலும் சில தனி நபர் மசோதாக்களும் அவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக எம்பிக்களை நம்பி இருக்கோம்! புகழ்ந்த கர்நாடக பெண்..தமிழக எம்பிக்களை நம்பி இருக்கோம்! புகழ்ந்த கர்நாடக பெண்.."சிஸ்டர்".. திமுக எம்பி சொன்ன அசத்தல் பதில்

அமளி

அமளி

இதில் தமிழ்நாடு எம்பிக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆளுநருக்கு எதிராக இரண்டு அவைகளிலும் குரல் எழுப்பி வருகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு ஆளுநரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவையில் எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றன. அதேபோல் நீட் விலக்கு மசோதாவை உடனடியாக ஏற்று குடியரசுத் தலைவர் அதை சட்ட மாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து திமுக எம்பிக்கள் உள்ளிட்ட தமிழ்நாடு எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தனி நபர் மசோதா

தனி நபர் மசோதா

இந்த அமளிக்கு இடையில்தான் நேற்று முக்கியமான இரண்டு மசோதாக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல் மசோதா கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பான மசோதா ஆகும். தற்போது கல்வித்துறை பொதுப்பட்டியலில் உள்ளது. இதை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் மசோதா தாக்கல் செய்தார். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால்தான் நீட் போன்ற சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

கல்வி

கல்வி

நீட் போன்ற சட்டங்களுக்கு ஆதிமூலமே கல்வி பொதுப்பட்டியலில் இருப்பது. இந்த நிலையில் அதையே மாற்றும் வகையில் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திமுக எம்பி வில்சன் மசோதா தாக்கல் செய்தார். இந்த மசோதா தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. காரணம் எமர்ஜென்சியின் போது மாநில உரிமைகள் பல பறிக்கப்பட்டன. அதில் கல்வி மாநில பட்டியலில் இருந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மூலம் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

மீண்டும் கொண்டு வர வேண்டும்

மீண்டும் கொண்டு வர வேண்டும்

இதை மீட்டு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு திமுக எம்பி வில்சன் மசோதா தாக்கல் செய்தார். இது போக இன்னொரு பக்கம் சுயமரியாதை திருமணம் தொடர்பான தனி நபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பெரியார் தொடர்ந்து முன்னிறுத்தி வந்த சுயமரியாதை திருமணத்தை தேசிய அளவில் சட்டமாக இயற்ற வேண்டும் என்று திமுக எம்பி செந்தில் குமார் மசோதா தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் அண்ணா மூலம் தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமண சட்டம் இயற்றப்பட்டு அமலில் உள்ளது.

Recommended Video

    கர்நாடகாவில் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய தடை.. லோக்சபாவில் குரல் எழுப்பிய திமுக எம்பி செந்தில்குமார்
    இந்தியா முழுவதும் மசோதா

    இந்தியா முழுவதும் மசோதா

    இதேபோல் இந்தியா முழுவதும் சுயமரியாதை திருமணம் சட்டமாக்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி செந்தில் குமார் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார். இந்த மசோதாவும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் தேசிய அளவில் சுயமரியாதை திருமணம் என்பது பெரிய அளவில் நடப்பது இல்லை. சம்பிரதாயங்கள் அற்ற ஜாதி மறுப்பு திருமணங்கள் வடஇந்தியாவில் மிகவும் குறைவு. இந்த நிலையில் திமுக எம்பி தாக்கல் செய்த மசோதா கவனம் பெற்றுள்ளது.

    English summary
    DMK MPs brought two important private members bill in Parliament yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X