SIR விதிகளை தளர்த்திய தேர்தல் ஆணையம்! நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலுக்கும் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கும், மற்ற இரண்டு ஆணையர்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மோதல் குறித்து செய்திகள் வெளியாகி விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் முழு குழுக்கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் SIR விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதை கவனித்த சமூக ஆர்வலர்கள், நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

SIR விஷயத்தில் எங்கள் பேச்சை கேட்கவில்லை என்பதுதான் தேர்தல் ஆணையர்களின் குற்றச்சாட்டு. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகம் செய்தியை வெளியிட்டிருந்தது.

EC relaxes rules

ஆனால், அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று பாஜகவினர் கூறி வந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் SIR விதிகளில் சில மாற்றங்களை அறிவித்திருக்கிறது. பிரச்சனை இல்லை எனில் எதற்காக இந்த சலுகை? அப்படியெனில் பிரச்சனை இருக்கிறது என்று ஊடகத்தில் வெளியான செய்தி உண்மைதானே! என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இன்று நடந்த கூட்டத்தில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதாவது சர்ச்சைக்கிடமான புதிய படிவம் 6 டிக்லரேசன் இந்த SIR திருத்த காலத்திற்கு மட்டுமே பொருந்தும். சாதாரண காலங்களில் பழைய எளிய படிவமே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விடுபட்ட அல்லது விசித்திரமான முரண்பாடுகள் உள்ள வாக்காளர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க தேவையில்லை. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளே அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆவணங்களை சேகரிப்பார்கள். மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலக்கெடு முறையே அக்.12 மற்றும் அக்.30 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சரவை செயலாளருக்கு எழுதப்பட்ட கடிதம் தேர்தல் ஆணையத்தின் கொள்கை முடிவுகள் சார்ந்தது கிடையாது. அது ஒரு குறிப்பிட்ட அதிகாரியின் பணிப் பகிர்வு மட்டுமே என்று ஆணையம் விளக்கமளித்திருக்கிறது.

இவ்வளவு பெரிய விளக்கத்தை பார்க்கும்போது.. தேர்தல் ஆணையத்தில் பஞ்சாயத்துகள் எதுவும் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட முடியாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பிரச்சனையில்லைனா.. எதுக்காக விளக்கம் கொடுக்கணும்? சலுகை கொடுக்கணும்? எனவே SIR நடவடிக்கையின்போது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+