ஆலோசனை சொல்றதுல்லாம் வழக்கம்தாங்க! சர்ச்சைக்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியான SIR தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. தேர்தல் செயல்முறையை மேம்படுத்த இது போல ஆலோசனை வழங்குவது வழக்கமான செயல்முறை தான் என்றும் தேர்தல் ஆணையம் அனைத்து முடிவுகளையும் ஒருமித்த முறையிலேயே எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணியாக தொடங்கப்பட்ட எஸ்ஐஆர்- Special Intensive Revision தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தையே பெரும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 2025 ஜூனில் பீகாரில் தொடங்கப்பட்ட எஸ்ஐஆர், 30 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிலையில், 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election Commission SIR Election Commission SIR

கருத்து வேறுபாடுகள்

இதற்கிடையே தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே எஸ்ஐஆர் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான முக்கிய முடிவுகளில் கருத்து வேறுபாடு இருந்தது தெரியவந்துள்ளது. ஆங்கில ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் இது குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது.. அதில இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். அதில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் பல விவகாரங்களில் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில முக்கிய முடிவுகள் தங்களுக்கு தெரிவிக்காமலேயே கூட எடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, புதிய வாக்காளர்களுக்கான Form-6ல் எஸ்ஐஆர் தொடர்பான புதிய கேள்வி சேர்க்கப்பட்டது, வாக்காளர் டேட்டா பேஸை மத்திய அளவில் அதிகமாக கட்டுப்படுத்துவது, மேற்கு வங்கத்தில் வாக்காளர் பெயர் நீக்கம் தொடர்பான மேல்முறையீடுகள், கோவாவில் 97 வாக்காளர்கள் பெயர்களை சாப்ட்வேர் சிக்கல் காரணமாக மீண்டும் சேர்க்க முடியாமல் போனது முக்கிய சர்ச்சைகளாக இருந்ததாக அறிக்கை கூறுகிறது.

தேர்தல் ஆணையம் விளக்கம்

மேலும், ஆணையத்தின் பெயரில் வெளியாகும் சில தகவல்களுக்கு உரிய ஒப்புதல் தேவை என்றும் இரு ஆணையர்களும் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SIR விவகாரத்தில் இரு ஆணையர்களும் மத்திய அரசின் கேபினட் செயலரிடம் தனித்தனியாக தங்கள் கவலைகளை தெரிவித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.

1. இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்புச் சட்டத்தின் 324வது பிரிவின் விதிகள் மற்றும் நீண்டகால நிறுவன நடைமுறைகளின் அடிப்படையில் செயல்படும் அரசியலமைப்பு அமைப்பாகும். இது பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு. எழுத்துப்பூர்வ குறிப்புகள் என்பது ஆகியவை வெளிப்படைத்தன்மை, செக் அண்ட் பேலன்ஸை உறுதி செய்வதற்கான வழக்கமான நடைமுறைகளாகும். தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டங்கள் மற்றும் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2. தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவுகள், முடிவுகள் மற்றும் நிர்வாக அறிவுறுத்தல்கள் அனைத்தும் சட்ட அங்கீகாரம் கொண்டவை. 2023ஆம் ஆண்டின் சட்டத்தில் உள்ள நடைமுறைகளின்படியே அவை மேற்கொள்ளப்படுகின்றன.

ஆலோசனை

3. ஆணைய உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் ஆலோசனைகள் வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாகும். குறிப்பாக வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், தேர்தல் நடைமுறைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

4. இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன் மாறுபட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வருவது என்பது எந்தவொரு நிறுவனத்திலும் இருக்கும் இயல்பான நடைமுறையாகும். மூன்று தேர்தல் ஆணையர்கள் மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரிக்கும் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க முழு அதிகாரம் உள்ளது.

5. 10 மாதங்களில் பதிவான சில குறிப்புகள் மற்றும் கருத்துகளை மட்டும் கூறுவது தெளிவான விளக்கத்தை கொடுக்காது. சமீப காலங்களில் ஆணையம் பல முடிவுகளை எடுத்ததுடன், பல தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம், எஸ்ஐஆர் உள்ளிட்ட பணிகளும் இதில் அடங்கும். கடந்த ஓராண்டில் இவை அனைத்தும் முழு தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல்

6. பீகார், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முக்கிய தேர்தல்களை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதற்காக மிக பெரிய நிர்வாக கட்டமைப்பு, ஏராளமான ஒப்புதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் தேவைப்பட்டன.

7. ECINet உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் தளங்களை உரிய அனுமதி இல்லாத அக்சஸ் செய்வதை தடுக்க கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன. ERO, DEO உள்ளிட்ட அதிகாரிகள், வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகளை தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்கின்றனர்.

தேர்தல் ஆணையம்

8. தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்புக் கடமைகளை முழுமையான நேர்மையுடன் தொடர்ந்து நிறைவேற்றும் என்றும், ஜனநாயகத்தை முன்னெடுப்பதில் தனது முக்கிய பொறுப்பை உணர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையர்களே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததாக வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. எதிர்க்கட்சிகளும் கூட இந்த விவகாரத்தை முக்கியமாக கையில் எடுத்துள்ள சூழலில் தான் இந்த விளக்கம் வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+