தேர்தல் காலகட்டத்தில் ரூ.8,889 கோடி பறிமுதல்! குஜராத்தில்தான் அதிகம்! லிஸ்டில் அடுத்து எந்த மாநிலம்?
டெல்லி: இந்தாண்டு தேர்தல் காலகட்டத்தில் ரூ.8,889 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றி உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த பொருட்களில் சுமார் 45 சதவீதம் போதைப் பொருட்கள் என்பதும் கவலையளிக்கும் விஷயமாகும்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்களில் மொத்தம் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளன. எஞ்சிய தொகுதிகளுக்கு மே 20, மே 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

லோக்சபா தேர்தல் காரணமாகப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம் தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக ரெய்டுகளையும் நடத்தி வருகிறது.
தேர்தல் ஆணையம்: இதற்கிடையே இந்த லோக்சபா தேர்தல் காலகட்டத்தில் எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்துத் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் ரூ.8,889 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பறிமுதல்கள் ரூ.9,000 கோடியைத் தாண்டும் என்றும் தேர்தல் முடியும் வரை இதுபோன்ற ரெய்டுகள் தொடரும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
45% போதைப்பொருள்: இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் தனது செய்திக்குறிப்பில், "தேர்தல் காலகட்டத்தில் ரூ.3,958 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது இதுவரை செய்யப்பட்ட பறிமுதல்களில் 45% ஆகும். ரெய்டில். போதைப் பொருட்கள் சிக்குவது அதிகரித்துள்ளது. கண்காணிப்பு மற்றும் ரெய்டு என கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கை காரணமாகவே இந்தளவுக்குப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
இந்த போதைப்பொருள், மதுபானம் உள்ளிட்டவை தேர்தல் செயல்முறையை நேரடியாகப் பாதிக்கிறது. இதன் காரணமாகவே, போதைப் பொருட்களைக் கைப்பற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம். எந்த பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு: தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, மொத்தம் ரூ. 8889 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் வெறும் 849 கோடி ரூபாய் தான். அதேநேரம் 814 கோடி ரூபாய் மதிப்பிலான 5.39 கோடி லிட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர ரூ. 1260 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2006 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள் உள்ளிட்ட மற்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எங்கு அதிகம்: மாநிலம் வாரியாக பார்க்கும் போது இந்த லோக்சபா தேர்தலில் குஜராத்தில் மட்டும் ரூ.1,461.73 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் இருந்து ரூ.1,132.82 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்ற மாநிலங்களிலும் கூட இந்த முறை அதிகப்படியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நொய்டா போலீசார் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மருந்து தொழிற்சாலையில் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 26.7 கிலோ எம்டிஎம்ஏ போதைப்பொருளைக் கைப்பற்றினர். இந்த விவகாரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 75 ஆண்டுக்கால மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இந்தளவுக்கு ரொக்கம், பொருட்கள் கைப்பற்றப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications