சோனியா, ராகுலுக்கு சொந்தமான டெல்லி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஆபீசுக்கு அமலாக்கத்துறை அதிரடி சீல்!
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் டெல்லி தலைமை அலுவலகத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடினர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை. நாடு விடுதலைக்கு முன்னரே அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நேரு தொடங்கி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் இந்த பத்திரிகையை நேரு தொடங்கினார். இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது.

2010-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதன் பங்குதாரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அப்போது அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டது. இக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவனப் பங்குகள் சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வருமான வரி துறை வழக்குப் பதிவு செய்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பங்குகள் கை மாறியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறி அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முதலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விசாரிக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி விசாரிக்கப்பட்டார். ராகுல், சோனியாவிடம் விசாரணை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி கைதாகினர்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சோனியா, ராகுல் காந்தியை பழிவாங்கும் வகையில் விசாரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியது. வருமான வரித்துறை சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கப் பிரிவு விசாரணை உள்நோக்கம் கொண்டது என்பது காங்கிரஸ் நிலைப்பாடு. இதனால் அமலாக்கப் பிரிவின் விசாரணைக்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை காங்கிரஸ் நடத்தியது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உட்படட 12 இடங்களில் நேற்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனைகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு அதிரடியாக சீல் வைத்தனர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அனுமதி இல்லாமல் நேஷனல் ஹெரால்டு அலுவகத்தை திறக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications