டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா தோல்வி: 'மட்டமான ஆட்டம்' கே.எல்.ராகுலின் குடியுரிமையை பறிங்க.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து எளிதில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தை குறிப்பாக கே எல் ராகுலின் மட்டமான ஆட்டத்தை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்துள்ளனர்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டன. இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

பெஞ்சில் டிகே.. ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு! டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா பேட்டிங்பெஞ்சில் டிகே.. ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு! டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா பேட்டிங்

ரசிகர்களின் கனவில் மண்

ரசிகர்களின் கனவில் மண்

இதனால், பாகிஸ்தான் அணியுடன் மோதப்போகும் அணி இந்தியாவா - இங்கிலாந்தா? என்பதை நிர்ணயம் செய்யும் போட்டியாக இன்றைய போட்டி அமைந்தது. இந்தப் போட்டியில் எப்படியும் வென்று இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்களின் கனவில் மண் விழுந்தது. இங்கிலாந்து அணிக்கு பெரிதாக நெருக்கடி இந்திய அணி கொடுக்கவில்லை.

 இந்திய வீரர்களை வசைபாடிய நெட்டிசன்கள்

இந்திய வீரர்களை வசைபாடிய நெட்டிசன்கள்

இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் இந்தியாவை துவம்சம் செய்து விட்டது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரையிறுதியோடு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அரையிறுதியில் மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களை இணையத்தில் நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுலை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

 ராகுலின் சொதப்பல் ஆட்டம்

ராகுலின் சொதப்பல் ஆட்டம்

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மட்டுமே கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடுவதாகவும்.. சர்வதேச போட்டிகளில் குறிப்பாக நாக் அவுட் கேமில் சிறப்பாக விளையாடுவதில்லை என ரசிகர்கள் கே.எல். ராகுலை விமர்சித்து வருகின்றனர். இன்றைய தினம் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்திலும் கே.எல் ராகுல் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களை மேலும் எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

 அணியில் இருந்து கழற்றிவிட வேண்டும்

அணியில் இருந்து கழற்றிவிட வேண்டும்

வெறும் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த கே.எல் ராகுல் பெவிலியனுக்கு நடையை கட்டினார். கே.எல் ராகுல் அவுட் ஆனதில் இருந்தே அவரைப்பற்றி விமர்சித்தும் ட்ரோல் செய்தும் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "கே.எல் ராகுலால் இந்திய அணி பாதிக்கப்பட்ட வரையிலும் போதும். இனிமேலும் பாதிக்கப்பட வேண்டாம். உடனே கே.எல் ராகுலை அணியில் இருந்து மொத்தமாக கழற்றிவிட வேண்டும் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

 கிரிக்கெட் வரலாற்றில் பெரிய 'சோக்கர்'

கிரிக்கெட் வரலாற்றில் பெரிய 'சோக்கர்'

அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறுகையில், ''இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பெரிய 'சோக்கர்' கே.எல் ராகுல் தான்" என்று பதிவிட்டு இருக்கிறார். கே.எல் ராகுல் அனைத்து முக்கிய போட்டிகளிலும் 'சரி தம்பி... நான் புறப்படுகிறேன்' என்று நடையை கட்டி விடுகிறார் என்று மீம்ஸ் போட்டுள்ளார். இன்னொரு நெட்டிசனோ ஒரு படி மேலே சென்று, 'கே.எல் ராகுலின் குடியுரிமையை பறிக்கக் கோரி மனு போட இருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

5 முறை ஒற்றை இலக்க ரன்

5 முறை ஒற்றை இலக்க ரன்

நடப்பு 20 ஓவர் உலக கோப்பையில் முன்னணி 8 அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல் ராகுல் 5 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் கே.எல் ராகுல் படு மோசமாகவே விளையாடினார். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வெறும் 3 மற்றும் 18 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார்.

ராகுல் மீது எரிச்சல்

ராகுல் மீது எரிச்சல்

நடப்பு தொடரில் கூட பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ரன்களிலும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 9 ரன்களிலும், இங்கிலாந்துக்க்கு எதிராக 5 ரன்களிலும் ஆட்டமிழந்து இருக்கிறார். முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதால் கே.எல். ராகுல் மீது ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

English summary
England beat India easily in the 2nd semi-final match today. The netizens trolled the poor performance of Indian players especially KL Rahul's poor performance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X