மனைவி கூட இப்படி திட்டுவது இல்லை.. கொஞ்ச 'ஜில்' ஆகுங்க.. டெல்லி ஆளுநருக்கு அறிவுரை கூறும் கெஜ்ரிவால்
டெல்லி: துணை நிலை ஆளுநர் என்னை தினமும் திட்டுவது போல.. எனது மனைவி கூட திட்டுவது இல்லை என்றும் கடந்த 6 மாதங்களில் ஆளுநர் அனுப்பியது போன்று இவ்வளவு காதல் கடிதங்களை என் மனைவி கூட எனக்கு எழுதியதில்லை என்றும் டெல்லி ஆளுநரை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக உள்ள கெஜ்ரிவாலுக்கும் அங்குள்ள துணை நிலை ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
டெல்லியை பொறுத்தவரை யூனியன் பிரதேசம் என்பதால், அங்கு துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது.

கெஜ்ரிவால் ஆளுநர் மோதல்
இதனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேற்பாடு நிலவுகிறது. அண்மையில் கூட டெல்லியில் கலால்துறை கொள்கையை அறிமுகப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் விகே சக்சேனா பரிந்துரைத்தார். இதையடுத்து கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட பல்வேறு நபர்களுகுகு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

மணிஷ் சிசோடியா கடிதம்
இப்படி அடிக்கடி ஆளுநருக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவை கடுமையாக சாடிய, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடிதம் எழுதினார். அதில், பாஜக ஆளும் நகராட்சிகளில் சுமார் 6 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. அதை கண்டும் காணாமல் உள்ளீர்கள். பாஜகவுக்கு தொடர்பு உள்ளதால் உங்கள் அணுகுமுறை இப்படி உள்ளது என்று கூறியிருந்தார்.

பாஜக நிராகரிப்பு
மணிஷ் சிசோடியாவின் இந்த கடிதத்திற்கு துணை நிலை ஆளுநர் பதில் எதுவும் அனுப்பவில்லை. அதேவேளையில், பாஜக இந்த குற்றசாட்டை நிராகரித்து விட்டது. வெறும் விரக்தியின் வெளிப்பாடாகவே மணிஷ் சிசோடியாவின் குற்றச்சாட்டை பார்ப்பதாக பாஜக கூறியிருந்தது. இந்த நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவை கடுமையாக சாடி அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜில்லாக இருக்க சொல்லுங்கள்
கெஜ்ரிவால் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- ''துணை நிலை ஆளுநர் என்னை தினமும் திட்டுவது போல.. எனது மனைவி கூட திட்டுவது இல்லை... கடந்த 6 மாதங்களில் ஆளுநர் அனுப்பியது போன்று இவ்வளவு காதல் கடிதங்களை என் மனைவி கூட எனக்கு எழுதியதில்லை. துணை நிலை ஆளுநரே கொஞ்சம் 'ஜில்' ஆகுங்கள். உங்களுக்கு மேலே சூப்பர் பாஸ்ஸையும் கொஞ்சம் ஜில்லாக இருக்க சொல்லுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications