டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என் பேத்திக்கு போய் நான் எப்படி.." பாலியல் புகாரால் உத்தரகண்ட் அரசியல்வாதி தற்கொலை.. நடந்தது என்ன

Google Oneindia Tamil News

டெல்லி: பாலியல் புகாருக்கு உள்ளான உத்தரகண்ட் அரசியல்வாதி அனைவருக்கும் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ராஜேந்திர பகுகுணா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 2004-05 காலகட்டத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்! பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!

சாலை போக்குவரத்துத் துறையில் தொழிற்சங்கத் தலைவரான இவர், ஹல்த்வானி டிப்போ பணிமனையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

 உத்தரகண்ட் அரசியல்வாதி

உத்தரகண்ட் அரசியல்வாதி

59 வயதாகும் இந்த ராஜேந்திர பகுகுணா தான், கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 26) வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேத்திக்கு ராஜேந்திர பகுகுணா பாலியல் தொந்தரவு அளிப்பதாக அவரது மருமகள் புகார் அளித்த மூன்று நாட்களில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 சமாதானம் முயற்சி

சமாதானம் முயற்சி

ராஜேந்திர பகுகுணா ஹல்த்வானியில் உள்ள தனது வீட்டிலிருந்து அவசர தொடர்பு எண்ணான 112இன் மூலம் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்களிடம் தனது தற்கொலைத் திட்டம் குறித்து போலீசாரிடம் விளக்கி உள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தண்ணீர் தொட்டி மேலே நின்று கொண்டிருந்த ராஜேந்திர பகுகுணாவை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இருப்பினும், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார்

போலீசார்

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி பங்கஜ் பட் கூறுகையில், "அவர் தனது மருமகளின் குற்றச்சாட்டால் மிகவும் வருத்தப்பட்டார். தண்ணீர் தொட்டியில் இருந்த அவரை ஸ்பீக்கர் பயன்படுத்தி சமாதானம் செய்ய முயன்றோம். ஆனால், அதை அவர் கேட்கவில்லை. தன் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு இருந்தார்" என்று தெரிவித்தார்.

 வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

முன்னதாக அவரது மருமகளின் புகாரின்படி பகுகுணா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின், ஒரு கட்டத்தில் அவர் கீழே இறங்கி வருவது போல இருந்தது. இருப்பினும், திடீரென அவர் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் அஜய் பகுகுணாவின் புகாரின் பேரில், அவரது மருமகள், மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
Uttarakhand politician Rajendra Bahuguna shot himself after case accusing him of molesting his granddaughter: (அனைவருக்கும் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட உத்தரகண்ட் அரசியல்வாதி) Uttarakhand politician suicide latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X