வரும் ஆனா வராது! கொரோனா 4வது அலைக்கு வாய்ப்பிருக்கு.. ஆனாலும் ஆபத்து இல்லை! நிபுணர் தரும் விளக்கம்.!
டெல்லி : இந்தியாவில் கடந்த இரு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 4வது அலைக்கு வாய்ப்பிருந்தாலும் அது ஆபத்தானதாக இருக்காது என நிபுணர்கள் கூறியுள்ளது சற்றே நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளது.
கொரோனா 3வது அலையின் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை திடீரென உச்சமடைந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களிலேயே உச்சமடைந்து பின்னர் மீண்டும் சரிவை நோக்கிச் சென்றது.
தடுப்பூசி மற்றும் மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கு வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கூறினர்.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் இந்தியாவில் இப்போது இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 24 அன்று, நாட்டில் 2,593 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பட்டனர். டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு, இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுகள் 90% அதிகரித்தது.

கொரோனா 4வது அலை
டெல்லி மற்றும் ஹரியானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் நான்கு நாட்களுக்குப் பிறகு மாநிலத்தின் பாதிப்பு குறித்த விவரங்களை பகிர்வதால் இந்த திடீர் உயர்வு இருப்பதாக கூறப்பட்டாலும், இந்தியாவில் ஓமிக்ரானின் பிஏ.2 மாறுபாட்டின் ஆதிக்கத்தின் நாட்டில் நான்காவது அலை ஏற்படலாம் நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்ட கொரோனா அலையை போலவே தற்போதைய சூழ்நிலையில் பதிப்பை பிஆ2 வைரஸ் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தீவிரமானது அல்ல
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட காரணிகளின் விளைவாக சமீபத்திய நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிரீன் டெம்பிள்டன் கல்லூரி பேராசியர் டாக்டர் ஷாஹித் ஜமீல் இதுகுறித்து கூறுகையில், "டெல்டாவுடன் ஒப்பிடக்கூடிய புதிய அளவுக்கு 4வது அலையை நாம் பார்க்கபோவதிலை, இப்போது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் அடிப்படையில் வேறுபட்டவை அல்ல. ஓமிக்ரான் ஏற்கனவே நாட்டில் நிறைய நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியுள்ளது. XE மாறுபாடு கூட Omicron ஐ விட தீவிரமானது அல்ல என கூறியுள்ளார்.

தடுப்பூசி எண்ணிக்கை
"பிஏ.2 மாறுபாடு ஓமிக்ரானை விட 2-20% அதிக பரவும் தன்மை கொண்டதாகும். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததும், பெரும்பாலான மாநிலங்கள் தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. இந்த காரணிகள் அனைத்தும் நோய் பாதிப்பு அதிகரிக்க காரணமாக உள்ளன. இரண்டு வருட கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகளுக்குப் பிறகு, தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று மக்கள் நினைத்துக் கொள்வதும் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video

ஓமிக்ரான் வகை
அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியரான கௌதம் மேனன், ஒவ்வொரு பெரிய அலையும் ஒரு குறிப்பிட்ட வைரஸ் மாறுபாட்டுடன் தொடர்புடையது என்று சுட்டிக்காட்டுகிறார். அசல் ஆல்பா மாறுபாடு, டெல்டா மற்றும் பின்னர் ஓமிக்ரான் வகைகள் கொரோனா அதிகரிப்பை ஏற்படுத்தியது. ஓமிக்ரானும் மிகவும் பரவக்கூடியது. தவிர, பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு சக்தியைக் பெற்றுள்ளனர். ஆனாலும் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றாலும், நோய்த்தொற்று ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்று கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications