டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயிருக்கு அச்சுறுத்தல்.. பாலியல் ரீதியாக மிரட்டல்.. பேஸ்புக் நிர்வாகி அங்கி தாஸ் போலீசில் புகார்

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி அங்கி தாஸ் தனது உயிருக்கும் உடமைக்கும் மிரட்டல் வருவதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆகஸ்ட் 14 அன்று வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்ட கட்டுரைக்கு பின்னர் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அங்கி தாஸ் கூறியுள்ளார்.

பேஸ்புக் தளத்தில் பாஜக தலைவர்களின் கட்டுரைகளுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சு விதிகளை பயன்படுத்துவதை அங்கி தாஸ் எதிர்த்ததாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் கூறியுள்ளது.

இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பேஸ்புக்கின் பொது கொள்கை இயக்குனர் அங்கி தாஸ். இவர் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக்கை வழிநடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் குறித்து அங்கி தாஸ் இதுவரை பதிலளிக்கவில்லை.

யார் இந்த அங்கி தாஸ்.. பாஜக-பேஸ்புக் 'வெறுப்பு பேச்சு' சர்ச்சையின் பரபர பின்னணியார் இந்த அங்கி தாஸ்.. பாஜக-பேஸ்புக் 'வெறுப்பு பேச்சு' சர்ச்சையின் பரபர பின்னணி

கருத்து தெரிவிக்கவில்லை

கருத்து தெரிவிக்கவில்லை

எனினும் பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் "நாங்கள் ஊழியர்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக்கொள்கிறோம். இருப்பினும், தனிப்பட்ட பணியாளரின் விஷயங்களில் நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

வால் ஸ்ட்ரீட் கட்டுரைக்கு பின்னர் தனது உயிருக்கும் உடமைக்கும் மிரட்டல் வருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி அங்கி தாஸ் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவான எஸ்.எச்.ஓவுக்கு அவர் மின்னஞ்சல் வாயிலா புகார் அனுப்பி உள்ளார். ஆன்லைன் வாயிலாக தனதுக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் வருவதாக கூறியுள்ளார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சைபர் கிரைம் பிரிவு விசாரணையை மேற்கொண்டுள்ளது" என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இடைவிடாத துன்பம்

இடைவிடாத துன்பம்

அங்கி தாஸ் தனது புகாரில் சில பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளை மேற்கோள் காட்டி, ஆகஸ்ட் 14 மாலை முதல் வன்முறை அச்சுறுத்தல்கள் வருகிறது என்று கூறியுள்ளார். அவர்கள் அளித்த இடைவிடாத துன்புறுத்தல்களால் "மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்' என்று கூறியுள்ளார்..

பாலியல் ரீதியாக மிரட்டல்

பாலியல் ரீதியாக மிரட்டல்

"எனது புகைப்படத்தை உள்ளடக்கிய உள்ளடக்கம் எனது உயிருக்கு மற்றும் உடலுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனது பாதுகாப்பிற்காகவும் எனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காகவும் நான் அஞ்சுகிறேன். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தங்களது அரசியல் தொடர்புகள் காரணமாக வேண்டுமென்றே என்னை இழிவுபடுத்தியுள்ளனர், இப்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர், என்னை குற்றவியல் மிரட்டலுக்கு உட்படுத்தி, பாலியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்கின்றனர், " இவ்வாறு புகாரில் அங்கி தாஸ் கூறியிருக்கிறார்.

Recommended Video

    BJP- க்கு ஆதரவு.. Facebook மீது குவியும் விமர்சனங்கள்
    காங்கிரஸ் பதில்

    காங்கிரஸ் பதில்

    இதனியே பேஸ்புக் வெறுப்பு பேச்சு விவகாரம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸின் சமூக ஊடகத் பிரிவு தலைவர் ரோஹன் குப்தா கூறுகையில், "எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரணை வேண்டும் என்று (ஜேபிசி) கேட்டுள்ளோம் என்றார்.

    English summary
    Ankhi Das, Facebook’s public policy director for India, files police complaint citing threats on social media
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X