டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்

Google Oneindia Tamil News

டெல்லி: 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தாா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு இயற்றியது.

Farm laws scrapped, President gives assent

இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.

பாராளுமன்ற கூட்டத்தொடர்.. வேளாண் சட்டம் ரத்து.. 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்.. முதல் நாள் நடந்தது என்ன? பாராளுமன்ற கூட்டத்தொடர்.. வேளாண் சட்டம் ரத்து.. 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்.. முதல் நாள் நடந்தது என்ன?

அவா்களின் போராட்டம் ஓராண்டாக, தொடா்ந்த நிலையில், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று கடந்த நவம்பர் 19ம் தேதி பிரதமா் மோடி அறிவித்தாா்.

Farm laws scrapped, President gives assent

இதையடுத்து, நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடா் கடந்த நவம்பர் 29ம் தேதி தொடங்கியதும் முதல் நாளிலேயே 3 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்களின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து அந்தச் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக முழுமையாக ரத்தாகிவிட்டன.

English summary
The three controversial farm laws that provoked a yearlong agitation in Delhi’s borders stood annulled on Wednesday with President Ram Nath Kovind giving his assent to the repeal bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X