கவலைப்படாதீங்க பானர்ஜி..நாங்க இருக்கோம்..மம்தாவுடன் திடீரென கைகோர்த்த தேவகவுடா..கேசிஆர் உடன் பேச்சு
டெல்லி : மிகப்பெரிய போரில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி உடன் இணைய இருப்பதாக, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசிய பிறகு முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக அரசையும் மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி வருகிறார்.
அவர் மட்டுமல்லாது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் அகிலேஷ் யாதவ் சரத்பவார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மம்தா பான்ர்ஜி முயற்சி
இதையடுத்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலை உள்ள அனைத்து கட்சிகளையும் இணைக்கும் சூழல் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். தற்போது உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அம்மாநில முக்கிய கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் அவருக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசியதாக தகவல் வெளியானது.

காங்கிரஸுக்கு இடமில்லை
ஏற்கனவே அவர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் உடன் பேசியதாக தகவல் வெளியான நிலையில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் அனைத்து எதிர்க்கட்சி களையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது ஆனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை அந்தக் கூட்டணியில் சேர்க்க மாட்டேன் என மம்தா பானர்ஜி கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா
இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி தலைவருமான இன்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்துப் பேசினார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய அவர்,"'வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நாம் வகுப்புவாத சக்திகளுடன் போராடி நாட்டைக் காப்பாற்ற வேண்டும்'' என தேவகவுடா கூறியதாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அரசியல் முக்கியத்துவம்
திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அதிகார அத்துமீறல் செய்வதாகவும், பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் இதற்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினிடமும் மம்தா பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சந்திரசேகர ராவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசியது முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications