பட்ஜெட் "லீக்".. மாற்றப்பட்ட பிரிண்டிங் இடம்.. ஆஹா இப்படி எல்லாம் கூட நடந்துச்சா? சுவாரசிய சம்பவம்
சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் 1947ல் நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது
டெல்லி: 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதற்கு முன் பட்ஜெட்டில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை பார்க்கலாம்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

சுவாரசிய சம்பவம்
2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதற்கு முன் பட்ஜெட்டில் நடத்த சில சுவாரசியமான சம்பவங்களை பார்க்கலாம். மத்திய பட்ஜெட் முதல்முறை தாக்கல் செய்யப்பட்டது.. அதாவது ஒருங்கிணைந்த இந்தியாவில் முதல்முறை பட்ஜெட் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 1860ல் ஏப்ரல் 7ம் தேதி ஸ்காட்லாந்தை சேர்ந்த பொருளாதார நிபுணர், வர்த்தகம் ஜேம்ஸ் வில்சன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. அவர் கிழக்கிந்திய கம்பனியில் பணியாற்றியவர். அப்போது இந்தியாவின் வருவாய் என்பது சொத்து வரி, தொழில் வருமானம், பாதுகாப்பு வரி, பென்சன் வருவாய் ஆகியவை மூலம் வருவாய் பெறப்பட்டது.

முதல் பட்ஜெட்
சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் 1947ல் நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆர்கே ஷண்முகம்ஷெட்டி தாக்கல் செய்தார். அப்போது அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தார். ஆர்கே ஷண்முகம்ஷெட்டி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவின் நிதி நிலை அறிக்கையை 22 முறை தமிழர்கள் தாக்கல் செய்துள்ளனர். முதல் பட்ஜெட் சுதந்திர இந்தியாவில் 5 மணிக்கு மாலை தாக்கல் செய்யப்பட்டது. 1999 வரை பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

பட்ஜெட் லீக்
சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் 1947ல் நவம்பர் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆர்கே ஷண்முகம்ஷெட்டி தாக்கல் செய்தார். அப்போது அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தார். ஆர்கே ஷண்முகம்ஷெட்டி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவின் நிதி நிலை அறிக்கையை 22 முறை தமிழர்கள் தாக்கல் செய்துள்ளனர். முதல் பட்ஜெட் சுதந்திர இந்தியாவில் 5 மணிக்கு மாலை தாக்கல் செய்யப்பட்டது. 1999 வரை பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

நிர்மலா சீதாராமன்
2019ல் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அதற்காக எப்போதும் கொண்டு வரப்படும் ப்ரீப் கேஸை கொண்டு வரவில்லை. மாறாக துணியில் உருவாக்கப்பட்ட ஒரு சிவப்பு நிற பையில், இந்திய தேசிய சின்னம் பொருந்திய பையை பயன்படுத்தினார். இந்த வருடம் டேப்லெட் வைக்கும் பேக் ஒன்றை பயன்படுத்தி உள்ளார். இதுவும் சிவப்பு நிறத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2021 வரை பட்ஜெட்டில் பேப்பர் பயன்படுத்தப்பட்டு வந்தது. 2021ல் பட்ஜெட்டில் மொத்தமாக பேப்பர் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications