டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2020-21 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் செப். 30 வரை நீட்டிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-21 ஆம் ஆண்டுக்கான தனி நபர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-21 ஆம் ஆண்டுக்கான தனி நபர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் நவம்பர் 30 வரை வருமானவரி கணக்கு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

FY20-21 income tax return filing deadline for deadline for individuals to September 30

2020-21 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். நிறுவனங்கள் வருமானவரி தாக்கல் செய்ய அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிநபர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ததற்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதி வரையும், நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு மிக குறைந்த வரி..முழு விலக்கு அளித்தால் விலை உயரும் அபாயம்..நிர்மலா சீதாராமன் விளக்கம்தடுப்பூசிக்கு மிக குறைந்த வரி..முழு விலக்கு அளித்தால் விலை உயரும் அபாயம்..நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதுபோல், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரையும், திருத்தப்பட்ட வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The government on extended the due date of filing income tax returns for 2020-21 for individuals by two months till September 30.he Central Board of Direct Taxes has also extended the ITR filing deadline for companies companies by a month till November 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X