கோவாக்சின். ஜைடஸ் தடுப்பூசிகள்.. குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.. மத்திய அரசு
டெல்லி : 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தலாம் என்று இங்கிலாந்து ஒப்புதல் அளித்த ஒரே நாளில் மத்திய அரசு கோவாக்சின் மற்றும் ஜைடஸ் உருவாக்கிய தடுப்பூசி இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு செலுத்தி சோதிக்கலாம் என்று அனுமதி வழங்கி உள்ளது.
Recommended Video
இங்கிலாந்து அனுமதித்ததை போல் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை பயன்படுத்த அரசாங்கம் அனுமதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், அளித்த பதிலில், நிட்டி ஆயோக், குழந்தைகள் மீதான தடுப்பூசிகளின் செயல்திறனை சோதிக்கும் சோதனைகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தீவிரமாக சோதிக்க வேண்டும். இந்தியாவில் குழந்தை எண்ணிக்கை சிறியது அல்ல. எங்களுக்கு சுமார் 25 கோடி டோஸ் தேவைப்படும். எங்களுக்கு நிறைய மருந்துகள் தேவைப்படுகிறது. எல்லோருக்கும் தடுப்பூசி போடுவது எளிதல்ல..
தற்போதைய நிலையில் பாரத் பயோடெக் ஏற்கனவே குழந்தைகள் மீது கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனைகள் நோயெதிர்ப்புத் திறனுக்கான சோதனைகள் என்பதால் அதிக காலம் எடுக்காது.
இதேபோல் "ஜைடஸ் தடுப்பூசி ஏற்கனவே குழந்தைகள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. எனவே அந்த தடுப்பூசியை நம் குழந்தைகளுக்கு செலுத்தலாமா என்பது குறித்து போதுமான ஆதாரங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் ஜைடஸ் தடுப்பூசி குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது என்றார்.
கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏன்? என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் வி.கே.பால், "நாங்கள் பாரத் பயோடெக் மற்றும் உலகசுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந்த மைல்கல் விரைவில் அடைய முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications