டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நாட்டில் வெறுப்பை பரப்பும் மதவாத பேச்சுகள் அதிகரித்துவிட்டது" உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவலை!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் வெறுப்புணர்வை பரப்பும் மதவாத பேச்சுக்கள் அதிகரித்துவிட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி ஷாஹீன் அப்துல்லா என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனு, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் ஷாஹீன் அப்துல்லா சாா்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி டிஒய் சந்திரசூட் நியமனம்! நவம்பர் 9ஆம் தேதி பதவியேற்கிறார்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி டிஒய் சந்திரசூட் நியமனம்! நவம்பர் 9ஆம் தேதி பதவியேற்கிறார்!

கபில் சிபல் வாதம்

கபில் சிபல் வாதம்

தொடர்ந்து கபில் சபல், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சும், வன்முறையும் ஆளும் கட்சியினரின் நேரடி மற்றும் மறைமுகமான ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை தடுக்க சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று கோரினாா்.

 மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

இதையடுத்து, இந்த மனு மீது பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சோ்த்து இந்த விவகாரமும் வேறு அமா்வால் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து இந்த மனு இன்று நீதிபதிகள் கேஎம் ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கேள்வி

நீதிபதிகள் கேள்வி

அப்போது வெறுப்பை பேசுவோர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து சந்தேகத்தை எழுப்பியது. தொடர்ந்து இஸ்லாமியர்களும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை பேசுகிறார்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிதற்கு, வெறுப்பு பேச்சுகளை பேசும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் கருத்து

நீதிபதிகள் கருத்து

தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மதத்தில் பெயரால் நாம் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம். ஜனநாயகம் மற்றும் பல்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டுள்ள நாட்டில் வெறுப்பை தூண்டும் மதவாத பேச்சுகள் கவலை அளிக்கின்றன. வெறுப்பை தூண்டும் பேச்சுகள் தொடர்பாக முறையாக புகார் வரும் வரை காத்திருக்காமல், காவல்துறை மற்றும் மாநில அரசுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

காவல்துறைக்கு உத்தரவு

காவல்துறைக்கு உத்தரவு

தொடர்ந்து அரசியல் சட்டப்பிரிவு 51 அ-வின் படி மக்கள் அனைவரும் அறிவியல் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடங்கிய பட்டியலை தாக்கல் செய்ய டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.

English summary
Judges of the Supreme Court have opined that there has been an increase in religious discourses that spread hatred in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X