அதென்ன பிரதமருக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை.. புகாரளித்த திரிணாமுல்.. முடிவை மாற்றிய சுகாதார துறை
டெல்லி: தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படத்தை நீக்க சுகாதார துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதார ஊழியர்கள் முன்களப் பணியாளர்கள் என மொத்தம் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது நடைபெறுகிறது.

மோடி புகைப்படம்
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரசியல் தலைவர் ஒருவரது புகைப்படம் இவ்வாறு இடம் பெறுவது சட்டவிரோதமானது என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் புகார்
இது தொடர்பாக அக்கட்சியின் எம்பி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், "சுகாதார துறை வழங்கும் சான்றிதழ்களில் மோடியின் புகைப்படத்தை வைப்பதன் மூலம், அவர் தனது பதவியையும் அதிகாரங்களையும் தவறாகப் பயன்படுத்துகிறார். இது மட்டுமல்லாமல், சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் என நமக்காக உழைத்தவர்களின் உழைப்பை அவர் திருடுகிறார்"என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நீக்க உத்தரவு
இதையடுத்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்குமாறு தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 6ஆம் தேதி கேட்டுக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு ஏற்ப தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை அறிவித்துள்ளது,

5 மாநில தேர்தல்
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் மார்ச் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்திற்கு வரும் மார்ச் 27, ஏப்ரல் 1,6 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதிகபட்சமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications