டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“டுவிஸ்ட்” - ஹிஜாபால் இப்படி ஒரு "நல்ல விசயம்" இருக்கே! உச்சநீதிமன்றம் முன்வைத்த புதிய “பாய்ண்ட்”

Google Oneindia Tamil News

டெல்லி: கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து செல்வதன் மூலமாக நாட்டின் பன்முகத்தன்மையை ஊக்கிவிக்கலாமே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

ஆமாவா? இல்லையா? ஹிஜாப் அணிபவர்களை “பள்ளி” செல்ல விடாமல் தடுக்கிறீர்கள் -உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விஆமாவா? இல்லையா? ஹிஜாப் அணிபவர்களை “பள்ளி” செல்ல விடாமல் தடுக்கிறீர்கள் -உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கடந்த 9 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

சமமான சட்ட பாதுகாப்பு

சமமான சட்ட பாதுகாப்பு


இன்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி துலியா மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நட்ராஜிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். "சீருடை சட்டத்தின் அடிப்படையில் சம பாதுகாப்பு அளிக்கிறது என்கிறீர்களா? சட்டத்தின்படி சம பாதுகாப்பு வழங்குவதற்கு வேறு அர்த்தம் உள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்லபோனால், தேசிய ஒருமைபாட்டை காரணமாக சொல்லி நீங்கள் அவர்களை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்கிறீர்களா?

நேரடியாக பதில் சொல்லுங்கள்

நேரடியாக பதில் சொல்லுங்கள்

ஒட்டு மொத்தமாக பார்த்தால், யாராவது ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர முயன்றால் நீங்கள் விட மாட்டீர்கள். ஆமாவா? இல்லையா? நீங்கள் ஏன் நேரடி பதிலை அளிக்க மறுக்கிறீர்கள்." என்றார். அடுத்து ஹிஜாபுக்கு எதிராக வாதாட வந்த மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணியிடமும் நீதிபதி துலியா தன்னுடைய கேள்விகளை அடுக்கினார்.

பன்முகத்தன்மை

பன்முகத்தன்மை

உங்கள் அடிப்படை உரிமை பள்ளிக்கு வெளியில் இருக்கும். பள்ளிக்குள் இருக்காது. அதானே? ஆசிரியர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஹிஜாப் பன்முகத் தன்மையை ஊக்குவிக்கிறது என்றும் ஒருவர் சொல்லலாம் தானே. மாணவர்களுக்கு கலாச்சார ரீதியாகவும் உணர்வை ஏற்படுத்தும். இதன் மூலம் மாணவர்கள் பன்முகத்தன்மை கொண்ட உலகை எதிர்கொள்வார்கள். சொல்லப்போனால் இவற்றை மதிப்பிடுவதற்கான வாய்ப்பு இது." என்றார்.

English summary
The Supreme Court has said that the diversity of the country can be promoted by students wearing hijab in educational institutions. It also asked to the Additional Advocate General of the Central Government whether you are preventing Hijab students from going to school on the grounds of national unity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X