டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இமாசல பிரதேசத்தில் பாஜக கஷ்டப்பட்டுதான் ஆட்சியை தக்க வைக்கும்..டஃப் கொடுக்கும் காங்கிரஸ்?

Google Oneindia Tamil News

இமாசல பிரதேசம் பாஜகவுக்கு தான்.. ஆனாலும் காங்கிரசும் மோசம் இல்லை.. டைம்ஸ் நவ் -இடிஜி எக்சிட் போல் இமாசல பிரதேசம் பாஜகவுக்கு தான்.. ஆனாலும் காங்கிரசும் மோசம் இல்லை.. டைம்ஸ் நவ் -இடிஜி எக்சிட் போல்

டெல்லி: 68 தொகுதிகள் கொண்ட இமாசல பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவிற்கு கடுமையான போட்டியை தரும் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரசும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன.

ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இமாசல பிரதேச மாநிலத்தில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் போடியிட்டன. தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானது.

தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் வாக்குறுதிகள்

பாஜகவுக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்தக் கட்சி 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை என கவர்ச்சி வாக்குறுதிகளை அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை என கவர்ச்சி வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்காக அதன் நிறுவனர் கெஜ்ரிவாலும், பஞ்சாப் மாநில முதல்வா பகவந்த் மானும் பிரசாரம் செய்தனர். இங்கு அந்தக் கட்சி 300 யூனிட் மின்சாரம், 6 லட்சம் பேருக்கு அரசு வேலை, வீடுதோறும் ரேஷன் பொருட்கள் வினியோகம் என வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளது.

ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு

ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு

ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்து கணிப்பில், மீண்டும் இமாச்சல பிரதேசத்தில் பாஜகவே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி பாஜக 34 முதல் 39 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 28 முதல் 33 இடங்களில் வெற்றி பெறும் என்றும்.. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 0-1 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ் பிஏஆர்சி

ஜீ நியூஸ் பிஏஆர்சி

68 தொகுதிகள் கொண்ட இமாசல பிரதேசத்தில் பாஜக 35 முதல் 40 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக ஜீ நியூஸ் பிஏஆர்சி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 20 முதல் 25 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி 3 இடத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஜீ நியூஸ் பிஏஆர்சி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.இதர கட்சிகள் 5 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது ஜீ நியூஸ் பிஏஆர்சி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆஜ் தக் அக்ஸிட் மை இந்தியா

ஆஜ் தக் அக்ஸிட் மை இந்தியா

ஆஜ் தக் அக்ஸிட் மை இந்தியா வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 24 முதல் 34 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 30 முதல் 40 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை எனவும் இதர கட்சிகள் 4 முதல் 8 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 32 முதல் 42 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 24 முதல் 32 இடங்களில் வென்று வலிமையான எதிர்கட்சியாக அமரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை எனவும் இதர கட்சிகள் 1 முதல் 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி

இந்தியா டிவி

இந்தியா டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 35 முதல் 45 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 26 முதல் 31 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை எனவும் பிற கட்சியினர் 3 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மலரும் தாமரை

மீண்டும் மலரும் தாமரை

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைத்த காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்பதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. இதனால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். குஜராத்தில் மீண்டும் பாஜக எளிதாக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் நன்கு போட்டி கொடுத்து நெருங்கி வருகிறது. எனினும் இது கருத்துக்கணிப்பு முடிவுகள் மட்டுமே என்பதும் கவனித்தக்கது. மக்களின் உண்மையான தீர்ப்பு என்னவென்பது வரும் டிசம்பர் 8 ஆம் தேதியன்று தெரிந்துவிடும்.

English summary
Himachal Pradesh Assembly Election 2022 Exit Poll Results: Find the Exit Poll Results for Himachal Assembly elections 2022 predicted by various pollsters including republic tv, times now, ABP, India Today and much more in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X