தென்னிந்திய படங்களை பார்த்ததே கிடையாது! சர்ச்சை கிளப்பிய ரஜினி பட நடிகர்!கேஜிஎஃப் வெற்றியால் பொறாமை?
டெல்லி : ஆர்ஆர்ஆர், கே ஜி எஃப் 2 ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் தென்னிந்திய திரைப்படங்களை இதுவரை தான் பார்த்ததே கிடையாது எனவும் இது குறித்த கேள்விக்கு நான் பதில் கூற முடியாது என பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தென்னிந்திய மொழிகளில் இருந்து பல படங்கள் நாடு முழுவதும் பெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை குவித்து வருகின்றன. இதற்கு முன்பு இந்திய அளவில் பாலிவுட் திரைப்படங்களே ரசிக்கப்பட்டன
பாகுபலி திரைப்படம் பாலிவுட்டில் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்த பிறகு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இந்தி திரைப்படங்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.

இந்தி ஆதிக்கம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான RRR மற்றும் KGF 2 படங்களின் வெற்றி பாலிவுட் மட்டுமல்லாது பல மொழி சினிமா துறைகளிலும் விவாதத்தைத் ஏற்படுத்தியது. அதோடு சேர்ந்தே இந்தி மொழி பற்றிய பழைய விவாதங்களை மீண்டும் தூண்டியது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் ஆகியோர் ட்விட்டரில் இந்தி தேசிய மொழியா என்பது குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

தென்னிந்திய மொழி படங்கள்
இது தென்னிந்திய மொழிப் படங்கள் ஆதிக்கத்தின் காரணமாகவே இந்தி பிரபலங்கள் தென்னிந்திய மொழிகள் மற்றும் படங்கள் குறித்து பொறாமை உணர்வை வெளிப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வரிசையில் தான் தென்னிந்திய படங்களை பார்த்ததே இல்லை என ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் கூறியுள்ளார். இதுதான் தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நவாசுதீன் சித்திக் பேச்சு
கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர், மன்டோ மற்றும் பஜ்ரங்கி பைஜான் போன்ற திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்ற நவாசுதீன் சித்திக், சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த அவர் தற்போது வணிக ரீதியிலான படங்களிலும் நடித்து வருகிரார். தற்போது டைகர் ஷெராஃப் உடன் அவர் நடித்துள்ள ஹீரோபண்டி 2 அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம், புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய படங்கள் சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறித்து கேட்கப்பட்டது.
Recommended Video

படங்களை பார்த்தது இல்லை
இதற்கு பதிலளித்த நவாசுதீன் சித்திக்," பொதுவாக தென்னிந்திய திரைப்படங்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. அதனால் தென்னிந்திய திரையுலகம் குறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது. ஒரு படம் நன்றாக இருக்கும் போது எல்லோரும் சேர்ந்து அதை தகுதியானதை விட அதிகமாக பாராட்டுகிறார்கள். அதேபோல் ஒரு படம் வெற்றி பெறவில்லை என்றால், மக்கள் அதை தகுதிக்கு கீழ் விமர்சிக்கிறார்கள்.ஆனால், ஒரு விஷயத்தை என்னால் தெளிவாக கூற முடியும். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் சிறிது காலத்துக்கு மக்கள் அதுகுறித்தே பேசிக் கொண்டிருப்பார்கள்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications