அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதற்கு பெயர்தான் ஹிந்துத்துவா: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
டெல்லி: இந்துத்துவம் என்ற கொள்கை அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதுதான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இந்துத்துவா என்ற பெயரில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைக்கும் நிலையில் மோகன் பகவத் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டசுமார் 150 பங்கேற்பாளர்கள் உடன் குஜராத்தில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் இவ்வாறு பேசியிருக்கிறார்.

அனைவரும் நன்கு வாழ வேண்டும்
இதோ அவரது பேச்சிலிருந்து.. அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதற்கு பெயர்தான் இந்துத்துவா. அனைத்து மக்களும் வளமாக வாழ வேண்டும் என்று நினைப்பது இந்துத்துவா. தடைகளை அகற்றும் போது சில நேரங்களில் முரண்பாடு மோதல் வரலாம். ஆனால் அது தான் இந்துத்துவா என்று சொல்லுவது சரி கிடையாது.

அதிகாரம் தேவை
இந்துத்துவா என்பதற்கான விளக்கம் இது. அதேநேரம் இந்துக்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தடைகளை அகற்ற வேண்டும் என்றால் நம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும். நாம் மேலும் சக்தி மிக்கவர்களாக மாறவேண்டும். நாம் சக்தி மிக்கவர்களாக அல்லது பலம் மிக்கவர்களாக மாற வேண்டும் என்று சொல்வது கொடுங்கோன்மை என்பதை பற்றி கிடையாது. நமது கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க சக்தி மிக்கவர்களாக மாறவேண்டும்.

பொதுவான கலாச்சாரம்
ஒரு நாடு என்பது பொதுவான கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களால் ஒன்றிணைக்கப்பட்ட மக்களைக் கொண்ட பொது நோக்கம் கொண்டது ஆகும். இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார். செவ்வாய்கிழமை காலை மோகன் பகவத் குஜராத் வருகை தந்தார். அவர் பிரபலமான நபர்கள் மற்றும் உள்ளூர் தொழில் அதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். குஜராத்தில் பூபேந்திர பாட்டில் முதல்வராக பங்கேற்ற பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

முதல் முறை சுற்றுப் பயணம்
குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி மாற்றப்பட்டு அங்கு பூபேந்திர பாட்டில் புதிய முதல்வராக 2 வாரங்கள் முன்பு பதவியேற்றார். குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சரை மாற்றியது பாஜக தலைமை. இறந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் மோகன் பகவத் அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications